புதன், 20 செப்டம்பர், 2017

கீழடி அகழாய்வு கண்காணிப்பாளரை மாற்ற கோரி விவசாயிகள் முறையீடு September 20, 2017

கீழடி அகழாய்வு கண்காணிப்பாளரை மாற்ற கோரி விவசாயிகள் முறையீடு


கீழடி அகழாய்வு பணிகளை ஆய்வு செய்த உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகளிடம், அகழாய்வு கண்காணிப்பாளரை மாற்ற கோரி விவசாயிகள் முறையிட்டனர்.

சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெற்று வரும் அகழாய்வு குறித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் சுந்தரேஷ், சத்தீஷ் குமார் ஆகியோர் நேற்று நேரில் ஆய்வு செய்தனர். 

அப்போது, ஆய்வின்போது கண்டெடுக்கப்பட்ட 2,000 ஆண்டுகள் பழமையான நாணயங்கள் குறித்தும் பிற பொருட்கள் குறித்தும் தொல்லியல் துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர். மேலும், அவற்றைப் பாதுகாக்க எத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்பது குறித்தும் அவர்கள் கேட்டறிந்தனர். 

அதோடு, மழை காரணமாக அகழாய்வில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்தும், அகழாய்வுக்காக தோண்டப்பட்ட பள்ளங்களில் உள்ள தண்ணீரை அகற்றுவது குறித்தும் கேட்டறிந்தனர். 

இந்நிலையில், கீழடி அகழாய்விற்காக நிலத்தை தானமாக அளித்தவர்களில் ஒருவரான சந்திரன், அகழாய்வு கண்காணிப்பாளர் ஸ்ரீராமை மாற்ற கோரி நீதிபதிகளிடம் முறையிட்டார்.