சனி, 7 அக்டோபர், 2017

டெங்கு காய்ச்சல் தொடர்பாக தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி! October 07, 2017

டெங்கு காய்ச்சல் தொடர்பாக  தமிழக அரசுக்கு  சென்னை உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி!


முதல்வரின் விரிவான இலவச மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் டெங்கு ஏன் சேர்க்கப்படவில்லை? என தமிழக அரசுக்கு  சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. 

டெங்கு காய்ச்சலுக்கு தமிழக முதல்வரின் விரிவான இலவச காப்பீட்டு திட்டத்தின் கீழ் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சையளிக்க வேண்டும் என வழக்கறிஞர் ஏ.பி.சூரிய பிரகாசம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம். சுந்தர் அடங்கிய அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், முதல்வரின் விரிவான இலவச மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் டெங்கு ஏன் சேர்க்கப்படவில்லை ? என கேள்வி எழுப்பினர். 

மேலும் தமிழகத்தில் டெங்கு காய்ச்சலுக்கு எந்த மாதிரியான சிகிச்சைகள் வழங்கப்படுகிறது? பக்கிங்ஹாம் கால்வாய், கூவம்நதி, அடையாறு ஆகியவற்றை சுத்தப்படுத்த என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?  எனவும் கேள்வி எழுப்பினர்.

அதேபோல குப்பைகள், கழிவுநீர் தேங்காமல் தடுக்க என்ன சுத்திகரிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது? என்பது குறித்து தமிழக அரசும், சென்னை மாநகராட்சியும் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை வரும் 12ம் தேதிக்கு ஒத்திவைத்தனர். 

Related Posts: