சனி, 7 அக்டோபர், 2017

தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்! October 07, 2017

தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்!


தமிழகம் முழுவதும் IAS மற்றும் IPS அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 

தமிழகம் முழுவதும் 26 IAS அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதில் முக்கியமானவர்கள் சிலரின் இடமாற்றத்தை தற்போது பார்க்கலாம். 

தமிழக அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை கூடுதல் செயலாளராக உள்ள ஜோதி நிர்மலாசாமி, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். 

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இயக்குநராக இருந்த டாக்டர் என். சுப்பையன், தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி வளர்ச்சி கழகமான தாட்கோ மேலாண்மை இயக்குநராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். 
 
தமிழ்நாடு மேக்னீசைட் நிறுவன தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் ஆர். கஜலெட்சுமி, சேலம் சாகோசெர்வ் மேலாண்மை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். 

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக பொது மேலாளர் கவிதா ராமு, அருங்காட்சியக இயக்குநராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். 
 
எல்காட் பொது மேலாளர் அன்பழகன், தமிழக அரசின் ஆவணக் காப்பக இயக்குநராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

முதல்வர் அலுவலக துணைச் செயலாளர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், மறுவாழ்வுத்துறை இயக்குநராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். 
 
முதல்வர் அலுவலக துணைச் செயலாளராக உள்ள ஜான் லூயிஸ், கடற்சார் வாரிய முதன்மை செயல் அலுவலர் மற்றும் துணைத் தலைவராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். 

தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவன பொதுமேலாளராக உள்ள ரமண சரஸ்வதி, e-Governance Agency இணை இயக்குநராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். 

தமிழ்நாடு மின்சார வாரிய ஊழல் தடுப்பு அதிகாரியாக பதவி வகித்த டிஜிபி கே.பி. மகேந்திரன், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை இயக்குநராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

ரயில்வே கூடுதல் டிஜிபியாக பதவி வகித்த ஸ்ரீலட்சுமி பிரசாத், தமிழ்நாடு மின்சார வாரிய ஊழல் தடுப்பு ஏடிஜிபியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். 

சிறைத்துறை கூடுதல் டிஜிபியாக பதவி வகித்த சி.சைலேந்திரபாபு, ரயில்வே கூடுதல் டிஜிபியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

அமலாக்கத்துறை கூடுதல் டிஜிபி அசுதோஷ் சுக்லா, சிறைத்துறை கூடுதல் டிஜிபியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு காவலர் போக்குவரத்துக் கழக சிறப்பு அதிகாரியாக பதவி வகித்து வரும் கூடுதல் டிஜிபி ராஜேஷ் தாஸ், அமலாக்கத்துறை கூடுதல் டிஜிபியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

குற்றப்பிரிவு கூடுதல் டிஜிபி சுனில்குமார், தமிழ்நாடு சீரூடைப் பணியாளர் தேர்வு வாரியத்தின் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். 

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தின் உறுப்பினர் கரண் சின்ஹா, போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்புப் பிரிவின் கூடுதல் டிஜிபியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்புப் பிரிவின் கூடுதல் டிஜிபியாக பதவி வகித்து வரும் அமரேஷ் பூஜாரி, குற்றப்பிரிவு கூடுதல் டிஜிபியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

காவல் தொழில்நுட்பத் துறை ஐஜி செந்தாமரைக்கண்ணன், தமிழ்நாடு சீரூடைப் பணியாளர் தேர்வு வாரியத்தின் உறுப்பினர் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். 

தமிழ்நாடு சீரூடைப் பணியாளர் தேர்வு வாரியத்தின் உறுப்பினர் செயலாளர் கல்பனா நாயக், பொருளாதாரக் குற்றப்பிரிவு ஐஜியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

பொருளாதாரக் குற்றப்பிரிவு ஐஜி அசோக் குமார் தாஸ், காவல் தொழில்நுட்பத் துறை ஐஜியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

சேலம் மாநகர் காவல்துறை ஆணையர் சஞ்சய் குமார், சென்னை பொருளாதாரக் குற்றப்பிரிவு ஐஜியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

அமலாக்கத்துறை ஐஜி கே. சங்கர், சேலம் மாநகர காவல்துறை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். 

திருச்சி ஆயுதப்படை டிஐஜி தீபக் எம்.தாமோர், சென்னை ரயில்வே டிஐஜியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். 

Related Posts: