50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் நகை வாங்குபவர்கள் பான் கார்டு எண் மற்றும் ஆதார் எண்ணை சமர்பிக்க வேண்டிய அவசியமில்லை என மத்திய அரசு அறிவித்துள்ளது.
ஜிஎஸ்டி கவுன்சிலின் 22-வது கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஏற்றுமதியாளர்களுக்கான IGST என அழைக்கப்படும் ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி. வரியில் இருந்து 6 மாதம் விலக்கு அளிக்க முடிவு செய்யப்பட்டது. 1 கோடி ரூபாய்க்கு கீழ் வர்த்தகம் செய்பவர்கள் 3 மாதங்களுக்கு ஒருமுறை கணக்கு தாக்கல் செய்தால் போதுமானது என்றும் முடிவு செய்யப்பட்டது.
மேலும், 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் நகை வாங்குபவர்கள் பான் கார்டு எண் மற்றும் ஆதார் எண்ணை சமர்பிக்க வேண்டிய அவசியமில்லை என்றும் அறிவிக்கப்பட்டது. தங்க நகை மற்றும் விலை உயர்ந்த கற்கள் மீதான சரக்கு மற்றும் சேவை வரியை திரும்பப்பெறவும் முடிவு செய்யப்பட்டது. மேலும், உச்சபட்ச ஜிஎஸ்டி வரி 28 சதவீத பட்டியலிலிருந்த பல பொருட்கள் குறைவான வரி சதவீதத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.
இணக்க முறையில் வரி செலுத்தும் சிறு வணிகருக்கான உச்சவரம்பு 75 லட்ச ரூபாயில் இருந்து 1 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டது. ஏற்றுமதியாளர்கள் முன்கூட்டியே செலுத்திய வரி வரும் 10-ம் தேதியிலிருந்து திரும்ப வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. மேலும், அடுத்த ஆண்டு ஏப்ரல் 1-ந் தேதி முதல் ஏற்றுமதியாளர்களுக்கு ஈ-வாலட் சேவை வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. ஜிஎஸ்டி கவுன்சிலின் அடுத்த கூட்டம் அடுத்த மாதம் 9 மற்றும் 10-ம் தேதிகளில் கவுஹாத்தியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.