திங்கள், 16 அக்டோபர், 2017

வரும் கல்வியாண்டில் அனைத்து வகுப்புகளும் கணினிமயம்: அமைச்சர் உறுதி October 16, 2017

வரும் கல்வியாண்டில் அனைத்து வகுப்புகளும் கணினிமயம்: அமைச்சர் உறுதி


அடுத்த மாதம் 15-ம் தேதி, 12-ம் வகுப்புக்கான புதிய பாடத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

கோபிசெட்டிப்பாளையத்தில் மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கும் விழா நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர், 30 ஆண்டுகளுக்கு மேலான அனைத்து பள்ளி கட்டிடங்களும், பழுது பார்க்கப்படும் என்று தெரிவித்தார்.

மேலும், வரும் கல்வியாண்டில் ஒன்பதாம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை அனைத்து வகுப்புகளும் கணினி மயமாக்கப்படும், என்றும் அவர் கூறினார்.

Related Posts: