திங்கள், 16 அக்டோபர், 2017

கர்நாடகாவிலும் தலித்துகளை அர்ச்சகர்களாக நியமிக்க நடவடிக்கை..! October 15, 2017




கேரளாவைப் போல் கர்நாடகாவிலும் தலித்துகளை கோவில் அர்ச்சகர்களாக நியமிக்கப் போவதாக அம்மாநில முதலமைச்சர் சித்தராமைய்யா தெரிவித்துள்ளார். 

பெங்களூருவில் பேசிய அவர், கர்நாடக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் 35 ஆயிரம் கோயில்கள் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். இவற்றில் தலித்துகள் அர்ச்சகர்களாக பணியாற்றக் கூடாது என விதி எதுவும் இல்லை, என்று அவர் கூறியுள்ளார். மேலும், கேரளாவைப் போன்று, கர்நாடகாவிலும் தலித்துகளை கோயில் அர்ச்சகர்களாக நியமிக்கும் நடவடிக்கையை மேற்கொள்வோம் என சித்தராமைய்யா தெரிவித்தார். அண்மையில், 6 தலித்துகள் உட்பட பிராமணர் அல்லாத 36 பேரை, கோயில் அர்ச்சகர்களாக கேரள அரசு நியமித்தது என்பது குறிப்பிடத்தக்கது. கர்நாடகாவிலும் தலித்துகளை அர்ச்சகர்களாக நியமிக்க நடவடிக்கை..!