டெல்லி: 2018-19-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் அருண் ஜெட்லி இன்று தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் ஏராளமான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்நிலையில் இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் குறித்து அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
காங்கிரஸ் மூத்த தலைவர் சிதம்பரம்:
நிதி ஒருங்கிணைப்பு சோதனையில் ஜெட்லிக்கு தோல்வி ஏற்பட்டுள்ளது. ஜெட்லியின் தோல்வி கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று கூறினார்.
தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை
நாடு பொருளாதாரம் வீட்டு பொருளாதார வளர்ச்சி கொண்ட ஆரோக்கிய பட்ஜெட். விவசாயிகளுக்கு கடன் அட்டை கொடுப்பது போல், மீனவர்களுக்கு கடன் அட்டை கொடுக்கப்பட உள்ளது.
மத்திய அமைச்சர் கட்கரி
10 கோடி குடும்பங்களுக்கு ரூ.5 லட்சம் மருத்துவ காப்பீடு மிகப்பெரிய திட்டம். வரலாற்று சாதனை மிக்க பட்ஜெட் என்று தெரிவித்தார்.
பீஹார் முதல்வர் நிதிஷ்குமார்
கல்வி, சுகாதாரம், விவசாயம் குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 10 கோடி குடும்பங்கள் பயன்பெறும் வகையில், தேசிய சுகாதார திட்டம் அறிவிக்கப்பட்டது மிகப்பெரிய சாதனை. இதற்காக அரசை பாராட்டுகிறேன்.
மதசார்பற்ற ஜனதா தள தலைவர் தேவகவுடா
விவசாயிகளை மேம்படுத்த நிதியமைச்சர் முயற்சி செய்துள்ளார். ஆனால் கிராமப்புற விவசாயிகளின் பிரச்னை பெரியது என்று கருத்து கூறினார்.
தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர்
2019 தேர்தலை கொண்டு பல அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. ரயில் திட்டங்களை ஒரு வருடத்தில் நிறைவேற்ற முடியுமா? இது கார்ப்பரேட் அரசாங்கம். இந்த வருடம் விவசாயிகள் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதா? என்று கேள்வி எழுப்பினார்.
பாமக நிறுவனர் ராமதாஸ்
வேளாண் அறிவிப்புகளை தவிர, பட்ஜெட் பெரும் ஏமாற்றத்தை அளிக்கிறது என்று கருத்து கூறினார்.
புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி
மத்திய அரசின் கடைசி பட்ஜெட் ஏமாற்றம் அளிக்கிறது, யூனியன் பிரதேசங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.
அமைச்சர் விஜயபாஸ்கர்
மத்திய பட்ஜெட்டில் சுகாதாரத்துறைக்கு முக்கியத்துவம் அளித்திருப்பது வரவேற்கத்தக்கது.

http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=372183