வியாழன், 1 பிப்ரவரி, 2018

நாடாளுமன்ற பட்ஜெட்டுக்கு பிறகு விலை உயரும் பொருட்களின் விவரங்கள்




புதுடெல்லி: மத்திய நிதியமைச்சர் அருண்ஜேட்லி 2018-19-ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டிற்கு பிறகு எந்தந்த பொருட்களின் விலை உயர்ந்துள்ளது என்பது தெரிவிக்கப்பட்டுள்ளது. எல்இடி/எல்சிடி டிவி, மொபைல் போன், ஆடம்பர கார் வாங்க திட்டமிட்டிருந்தவர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றம் கிடைத்துள்ளது. கலால் மற்றும் இறக்குமதி வரி அதிகரிப்பால் இவற்றின் விலை அதிகரித்துள்ளது. மத்திய அரசு அறிவித்திருந்தது போல இந்த பட்ஜெட்டில் கலால் மற்றும இறக்குமதியில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதனால் சில பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. இதேபோல கல்விக்கான செஸ் வரியும் 3 சதவீதத்தில் இருந்து 4 சதவீதமாக உயர்ந்துள்ளது.

பட்ஜெட்டுக்கு பிறகு விலை அதிகரிக்கும் பொருட்களின் விவரம்:    

* செல்போனுக்கான சுங்கவரி 15 சதவீதத்திலிருந்து 20 சதவீதமாக அதிகரித்துள்ளதால் விலை உயர்கிறது.

* இறக்குமதி கார்கள், இருசக்கர வாகனங்கள், செல்போன்கள், தங்கம், வெள்ளி விலை உயரும்.

* காலணிகள், காய்கறிகள், பழச்சாறுகள், கூலிங்கிளாஸ், வாசனை திரவியங்கள் விலை உயரும்.

* மின்விளக்குகள், கைக்கடிகாரங்கள், கடிகாரங்கள், ஸ்கூட்டர், 3 சக்கர வாகனங்களின் விலை உயரும்.

* அழகுசாதன கிரீம்கள், பல் சிகிச்சை பொருட்கள், ஷேவிங் சாதன பொருட்களின் விலை உயர்கிறது.

* ஆபரண கற்கள், வைரம், ஸ்மார்ட் கை கடிகாரங்கள், எல்சிடி, எல்இடி பேனல்களின் விலை உயர்கிறது.

* எல்சிடி/எல்இடி டிவிகள், லேப்டாப்கள், வீடியோ கேம்கள் விலை உயர உள்ளது.

* சமையலுக்கு பயன்படுத்தும் ஆலிவ் மற்றும் கடலை எண்ணெய் விலை உயர்கிறது.

பட்ஜெட்டுக்கு பிறகு விலை குறையும் பொருட்கள் விவரம்:

* வறுக்கப்படாத முந்திரிக்கொட்டைகள் விலை குறைகிறது.

* சோலார் கிளாஸ்கள் விலை குறைகிறது.

* காதுகேளாதோர் பயன்படுத்தும் கருவிகள்

* பால் ஸ்க்ரூ உள்ளிட்ட பொருட்கள்

* ஆரோக்கியம் சார்ந்த சேவைகளின் விலையும் குறையவுள்ளது.