தமிழக அரசின் மானிய விலையிலான ஸ்கூட்டி வாங்க முனைப்பு காட்டும் பெண்கள், ஓட்டுனர் உரிமம் பெறுவதற்காக ஒரே நேரத்தில் சங்கரன்கோவில் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் குவிந்ததால், அங்கு நெருக்கடி ஏற்பட்டது.
மானிய விலையில் ஸ்கூட்டி வழங்கும் திட்டம், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்ரவரி 24ம் தேதி முதல் துவங்கப்படவுள்ளது.
இந்நிலையில், மானிய விலையில் ஸ்கூட்டி வாங்குவதற்காக விண்ணப்பித்த பெண்கள், இருசக்கர வாகனம் ஓட்டுவதற்கான உரிமம் பெற வேண்டும் என்பதால், சங்கரன்கோவில் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் அதிகளாவில் பெண்கள் குவிந்தனர்.
ஒரே நாளில் 300க்கும் மேற்பட்ட பெண்கள் அலுவலகத்தில் திரண்டதால், அங்கு இடநெருக்கடி ஏற்பட்டது. மேலும், பெண்கள் ஒவ்வொருவரும் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருக்கும் நிலையும் ஏற்பட்டது.
மாநிலம் முழுவதும் பெரும்பாலான வட்டார போக்குவரத்து அலுவலகங்களிலும் இதே நிலை காணப்படுகிறது.