வெள்ளி, 2 பிப்ரவரி, 2018

ஆதிச்சநல்லூர் அகழாய்வு குறித்து தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு! February 2, 2018

Image

ஆதிச்சநல்லூர் அகழாய்வு பொருட்களை, கார்பன் பரிசோதனைக்கு அனுப்புவதற்கான நிதியை, 2 வாரங்களில் ஒதுக்க, தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

செய்துங்கநல்லூரை சேர்ந்த எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராஜ் என்பவர், தொடர்ந்த வழக்கில் இவ்வாறு உத்தரவிடப்பட்டுள்ளது. அகழாய்வு நடைபெற்ற இடத்தில் மணல் குவாரி நடத்தப்படுவதாக புகார் எழுந்த நிலையில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இன்று நேரில் ஆஜராகி, அதுபோல மணல் குவாரி எதுவும் செயல்படவில்லை எனவும், உரிமம் எதுவும் வழங்கப்படவில்லை எனவும் தெரிவித்தார்.

இதையேற்ற நீதிபதிகள் அகழாய்வு நடைபெற்ற இடத்தை சுற்றி, வேலி அமைத்து பாதுகாக்கவும், அங்கு ஒரு புறக்காவல் நிலையம் அமைக்கவும் உத்தரவிட்டனர். மேலும், ஆதிச்சநல்லூர் அகழாய்வு பொருட்களை, கார்பன் பரிசோதனைக்கு அனுப்புவதற்கான நிதியை 2 வாரங்களில் ஒதுக்க உத்தரவிட்ட நீதிபதிகள், இந்த வழக்கை பிப்ரவரி 19-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.