
டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தின் பெயர் மீண்டும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டது. அதன்படி, டெல்லியில் செயல்பட்டு வரும் தமிழக அரசின் இரண்டு விருந்தினர் இல்லத்திற்கும், வைகை தமிழ்நாடு இல்லம், பொதிகை தமிழ்நாடு இல்லம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரு நாட்களுக்கு முன்னர், டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தின் கட்டடங்களுக்கு, "வைகை தமிழ் இல்லம்", "பொதிகை தமிழ் இல்லம்" என பெயர் சூட்டப்பட்டது. இதுதொடர்பாக சில விமர்சனங்கள் எழுந்த நிலையில், தற்போது மீண்டும் பெயர் மாற்றப்பட்டுள்ளது