ஞாயிறு, 4 பிப்ரவரி, 2018

​சாலை பராமரிப்புக்கான டெண்டரில் முறைகேடு - சென்னை மாநகராட்சி பதில் அளிக்க உத்தரவு! February 4, 2018

Image

சாலைகளை பராமரிப்பது தொடர்பான இ-டெண்டரில் முறைகேடு நடந்துள்ளதாகவும், அந்த டெண்டர் அறிவிப்பை ரத்து செய்யக்கோரியும் தொடரப்பட்ட வழக்கில், சென்னை மாநகராட்சி பதில் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை மணலியை சேர்ந்த எஸ்.மகாதேவன் என்பவர் தொடர்ந்த வழக்கில், இவ்வாறு உத்தரவிடப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களில் பேருந்துகள் செல்லும் உட்புற சாலைகளை பராமரிப்பதற்கும், மேம்படுத்துவதற்கும், சென்னை மாநகராட்சி கடந்த டிசம்பரில் டெண்டர் அறிவிப்பை வெளியிட்டது. இந்த டெண்டரில் வெளிப்படைத்தன்மை இல்லை என்றும், மாநகராட்சிக்கு அதிக இழப்பை ஏற்படுத்தும் இந்த டெண்டர் அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும் என்றும், மனுதாரர் தரப்பில் கோரப்பட்டது. இந்த மனு நீதிபதி கே.ரவிச்சந்திர பாபு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கில் சென்னை மாநகராட்சி ஆணையர் மற்றும் சம்மந்தப்பட்ட துறை பொறியாளர்கள் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டார். மேலும், வழக்கின் விசாரணையை வரும் வியாழக்கிழமைக்கு ஒத்திவைத்தார்.

Related Posts: