ஞாயிறு, 4 பிப்ரவரி, 2018

கர்நாடகத்தில் இருந்து தமிழகத்திற்கு காவிரி நீர் கிடைக்காது : சுப்பிரமணியன்சுவாமி February 4, 2018

Image

கர்நாடகத்தில் இருந்து தமிழகத்திற்கு காவிரி நீர் கண்டிப்பாக கிடைக்காது என பாரதிய ஜனதா கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தின் நீர் தேவையை பூர்த்தி செய்ய மாற்று வழிகள் இருப்பதாகக் கூறினார். தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணைமுதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வமும் கேட்டுக்கொண்டால் மாற்று வழி குறித்து தான் தெரிவிப்பேன் என்றும் சுப்ரமணியன் சுவாமி குறிப்பிட்டார்.

2ஜி வழக்கில் விரைவில் மேல்முறையீடு செய்ய உள்ளதாகக் கூறிய அவர், வேட்பாளர்களிடம் பணம் வாங்காமல் தொண்டர்களை நிறுத்தி தேர்தலை சந்தித்தால் தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெறும் என தெரிவித்தார்

Related Posts: