
கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு அதிகமான குளிர் சென்னையில் தற்போது இருப்பதாகக் கூறப்படுகிறது. இரவு நேரத்தில் வெப்பநிலை 17 டிகிரி செல்ஷியஸ் வரை குறைகிறது.
இந்நிலையில்ம் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சில இடங்களில் நாளை லேசான மழையும், நாளை மறுநாள் மிதமான மழையும் பெய்யும் என்றும், சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் கூறியுள்ள வானிலை ஆய்வு மையம் தமிழகம் முழுவதும் நிலவி வரும் பனியின் தாக்கம் நாளை முதல் படிப்படியாகக் குறையும் எனவும் தெரிவித்துள்ளது.