
வேதாரண்யம் மீனவர்கள் வலைகளை இலங்கை மீனவர்கள் பறித்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வேதாரண்யத்தை அடுத்த ஆறுகாட்டுத்துறையில் இருந்து 50-க்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்று கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். இதில் மயில்வாகனன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் சென்ற 5 மீனவர்கள், கோடியக்கரைக்கு தென்கிழக்கே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது, அங்கு வந்த இலங்கை மீனவர்கள் 1 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பிலான 300 கிலோ வலைகளை வெட்டி, பறித்துச் சென்றனர். இதுகுறித்து, பாதிக்கப்பட்ட மீனவர்கள் படகு உரிமையாளர் மயில்வாகனத்திடம் தகவல் தெரிவித்ததை அடுத்து, அவர் வேதாரண்ய கடலோர காவல்நிலையத்தில் புகாரளித்துள்ளார்.