
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு, 10 ஆண்டுகளுக்கு மேல் தமிழக சிறைகளில் உள்ள ஆயுள் தண்டனை கைதிகளையும், 60 வயதிற்கு மேற்பட்டு 5 ஆண்டுகள் பூர்த்தியடைந்த ஆயுள் கைதிகளையும் விடுவிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
இதுதொடர்பாக, தமிழக சட்டத்துறை பிறப்பித்துள்ள அரசாணை, தமிழகத்தில் உள்ள 9 மத்தியச் சிறைச்சாலைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதில், ஜெயலலிதாவின் பிறந்தநாளான பிப்ரவரி 25ஆம் தேதியை மையமாக வைத்து, கைதிகளை பற்றிய விவரங்கள் கேட்கப்பட்டுள்ளன.
அண்மையில், திண்டுக்கல்லில் நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் நன்னடத்தை மற்றும் மனிதாபிமான அடிப்படையில் 10 ஆண்டுகளுக்கு மேல் உள்ள கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.
அதன்படி, சட்டத்துறை பிறப்பித்துள்ள அரசாணை, சிறைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது.