புதன், 25 ஏப்ரல், 2018

நீதியுள்ள மாமனிதர் அவ்ரங்கசீப் தகுந்த நீதி வழங்கினார் என்பது வரலாற்றில் உள்ளது.



 மன்னர் அவ்ரங்கசீப் படைகள் திரும்பி போய்க்கொண்டிருக்கிறது. வழியில் வாரணாசியை கடக்க வேண்டும். அருகே தங்கிச் செல்ல முகாம் ஏற்படுத்தப்படுகிறது. 

படைத்தளபதிகளுக்கு ஓர் எண்ணம். வாரணாசி வந்து விட்டோம். காசி விஸ்வநாதரை தரிசித்து அப்படியே கங்கை நீராடிவிட்டு செ
ல்லலாமே. மன்னரிடம் அனுமதி கேட்கப்படுகிறது. தன் மக்களின் மன ஓட்டம் அறிந்த மன்னர் உடனே சம்மதிக்கிறார். தானும் தன் குடும்பமும் தங்கிக் கொண்டு ஹிந்து மக்கள் அனைவரும் சென்று தரிசித்து வாருங்கள் என்று அனுமதியளிக்கிறார். 
உற்சாகமாக படையினர் தம் குடும்ப சகிதமாய் புறப்பட்டு கோவிலுக்கு சென்றனர். தரிசனம் செய்தனர். மாலை மயங்கி இரவு எட்டும் வரையும் உலாவினர். 
திரும்ப தொடங்கிய போது ஒரு தளபதியின் மனைவியை மட்டும் காணவில்லை. தேடினர். படை பரிவாரம் சேர்ந்து ஊரெங்கும் தேடியும் அந்தப் பெண் மட்டும் கிடைக்கவில்லை. செய்தியறிந்த மன்னரும் வருந்தினார். தேடுதலை துரிதப்படுத்தினார். நள்ளிரவு தாண்டியும் கிடைக்கவில்லை. அப்போது ஒரு புலனாய்வு தகவல் வருகிறது. 
விஸ்வநாத ஸ்வாமி சன்னதியின் கருவறை அடியில் பாதாள அறையில் ஒரு பெண்ணின் முனகல் கேட்கிறது. 
வெள்ளமென பாய்ந்து படைகள் உள் நுழைந்தன. அங்கே குத்துக் காலிட்டு தலைவிரி கோலமாய் நிர்வாணியாய் தேடப்பட்டப் பெண் அமர்ந்துள்ளார். 

மீட்டெடுத்து கேட்ட போது தலைமை பூசாரி பூஜையின் போதே கடத்தி கொண்டு போய் விட்டார். புகையும், கூட்டமும், ஆரவாரமும் பூசாரிக்கு சாதகமாக இருந்ததால் காரியம் கச்சிதமாக முடிந்திருக்கிறது.

கற்பிழந்ததையும் கதறியதையும் கண்ணீரோடு அப்பெண் சொன்ன போது படையே பதறியது. " கோவிலின் கருவரையில் காம வெறி" தீர்த்த தலைமை பூசாரி தேடப்பட்டார். கிடைத்த இடத்திலேயே படைத்தளபதி வெட்டிச் சாய்த்தார். கலங்கம் கறேயேறிவிட்டதா?
மன்னரை சந்தித்து படையினர் முறையிடுகின்றனர். 
காசி விஸ்வநாதர் கோயிலின் புனிதம் போய் விட்டது. ஆகம விதிப்படி இனி அங்கு பூஜை செய்யவோ, வழிபடவோ இயலாது. எனவே இந்த கோவில் முழுமையாக அகற்றப்பட்டு புதிதாக கட்டப்பட வேண்டும் என கோரிக்கை முன் வைக்கப்படுகிறது. 
இந்து ஆகம விதிகளோ, சம்பிராதாயங்களோ என்னால் தீர்ப்பளிக்க முடியாது. எனவே இந்து மத வேதாந்திகள், வல்லுனர்கள் என்ன சொல்கிறார்களோ அப்படி செய்யுங்கள் என மன்னர் சொல்லி விட்டார். ஆலோசித்து முடிவு தெரிவிக்கப்பட்டது. கோவிலை இடித்துவிட்டு புதிதாக கட்ட வேண்டும். மன்னர் ஏற்றுக் கொண்டார். படைத்தளபதிகளான இந்துக்கள் முன் நின்று அந்த கோவிலை அகற்றினர். தொடர்ந்து மன்னர் அவ்ரங்கசீப் அளித்த அரசு பெருங் கொடையில் அந்த கோவில் முன்னைவிட அழகாக, பெரிதாக கட்டப்பட்டது. 

இந்துத்வ வாதிகள் இங்கே நின்று பேசுவார்கள். அவ்ரங்கசீப் கோவிலை இடித்தார் என்று பழி சொல்வர். ஆனால் இந்த நிகழ்வை மறைப்பர். கேட்டால் கோவிலில் இப்படி நடந்ததென்று பொய் சொல்கிறார்கள் என்பர். 

காஷ்மீர் குழந்தை ஆசிபாவின் மீது நடத்தப்பட்டவைகள் யாவும் இன்று போல அன்றும் நடந்தது உண்மை என்பதை புரிய வைக்கிறது. வரலாறு தன்னை புதுப்பித்துக் கொண்டு பொய்யர்களின் புரட்டு அழுக்குகளை வெளியே தள்ளியுள்ளது. 

அன்று படைத்தளபதியின் மனைவிக்கு ஏற்பட்ட கொடுமை இன்று சிறுமி ஆசிபாவுக்கு ஏற்பட்டுள்ளது. 

அன்று நீதியுள்ள மாமனிதர் அவ்ரங்கசீப் தகுந்த நீதி வழங்கினார் என்பது வரலாற்றில் உள்ளது. 

அதை புரட்டும் புரட்டர்கள் இன்று என்ன செய்யப் போகிறார்கள், நீதி வழங்குவார்களா?