ஞாயிறு, 29 ஏப்ரல், 2018

தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் துணை ராணுவம் குவிப்பு


தஞ்சை: காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் ஹைட்ரோ கார்பன் திட்டம் உள்ளிட்ட விவகாரங்களில் போராட்டங்கள் நடைபெற்றுவரும் நிலையில் தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் துணை ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. காவிரி டெல்டா பகுதிகளில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவும், ஓ.என்.சி உள்ளிட்ட திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். 

இதனைபோன்று பதற்றமான பகுதிகளான கதிராமங்கல், நெடுவாசல் உள்ளிட்ட பகுதிகள் பதற்றமாக பகுதியான அறியப்பட்டு வருகிறது. இந்நிலையில் கோவையில் இருந்து மத்திய அதிவிரைவு கலவா தடுப்பு போலீசார் கடந்த மாதம் திருவாரூரில் ஆய்வு பணி மேற்கொண்டு தஞ்சை மாவட்டம் வந்துள்ளனர். 60க்கும் மேற்பட்ட மத்திய அதிவிரைவு கலவா தடுப்புப் படையினர் தஞ்சையில் உள்ள அரசு பள்ளியில் முகாமிட்டு போராட்டம் நடைபெற்றால் எப்படி கட்டுபடுத்தலாம் என்று ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.