வெள்ளி, 20 ஏப்ரல், 2018

​ஸ்மார்ட் போனில், அதிக நேரத்தை செலவிடும் இந்தியர்கள்! April 20, 2018

Image

இந்தியாவில் ஸ்மார்ட்போன் பரவலாகிவிட்ட நிலையில், 90 சதவிகிதம் பேர் எப்போதும் ஆன்லைனில் இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.  

2017-ம் ஆண்டில் COMSCORE என்ற நிறுவனம் நடத்திய ஆய்வில், இந்தியர்கள், கணினியில் நேரத்தை செலவிடுவதை விட ஸ்மார்ட்போனில் அதிக நேரத்தை செலவிடுவது தெரியவந்துள்ளது. வாட்ஸ் அப்-ஐ மட்டும் 98 சதவிகிதம் பேர் பயன்படுத்துவது ஆய்வில் தெரியவந்துள்ளது. 

ஸ்மார்ட்போனில், சமூக வலைத்தளங்கள், யூ டியூப், ஜிமெயில் போன்றவற்றிற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் இந்தியர்கள், இன்சூரன்ஸ் மற்றும் மருத்துவமனை போன்றவற்றை தொடாமல் இருப்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளது. 

இதேபோன்று இந்தோனேசியாவில் 87 சதவிகிதமும், மெக்ஸிகோவில் 80 சதவிகிதத்தினரும் எப்போதும் ஆன்லைனில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.