புதன், 25 ஏப்ரல், 2018

சாம்ராஜ்யங்களை யார் தட்டிக் கேட்பது?

இந்த ஒப்பீடு கொடுமையானது...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
சிறுமி ஆசிஃபாவைச் சீரழித்த மதவெறியர்கள் குறித்துப் பதிவிட்டபோது உடனே சில இந்துத்துவர்கள், “ஏன் மௌலவிகள் மதரஸாக்களில் சிறுவர்களை வன்புணர்வு செய்வதில்லையா?” என்று கேட்டார்கள்.
கண்ணியம் கருதி அத்தகையப் பதிவுகளைக் கடந்துசென்று விட்டேன்.
இப்போது சாமியார் ஆசாராம் குறித்து எழுதும்போதும் அதே கேள்வியை முன்வைக்கிறார்கள்..“மதரஸாக்களில் சிறுவர்கள் வன்புணர்வு செய்யப்படுவதில்லையா? என்று.
பதில் சொல்லிவிடுவதுதான் நல்லது என்று நினைக்கிறேன்.
இருக்கலாம். மதரஸாக்கள் எல்லாம் தவறுகளே நடக்காத, புனிதங்கள் மட்டுமே பூத்துக்குலுங்குகின்ற மகோன்னத பீடங்கள் என்றெல்லாம் நான் சொல்ல வரவில்லை.
ஆனால் ஒன்றை உறுதியாகச் சொல்வேன்.
மதரஸாக்களில் நடைபெறும் தவறுகள் மிக மிக அபூர்வமானவை.
ஒப்பீட்டளவில் மிக மிகக் குறைவானவை.
போலி சாமியார்களையும் மௌலவிகளையும் ஒப்பிடுவதே கூட சரியானது அல்ல.
ஏனெனில், ஏழு ஆண்டுகள் ஓதி முடித்தும் மிகக் குறைந்த சம்பளத்தில் மதரஸாக்களில் பணியாற்றுபவர்கள் மௌலவிகள்.
அவர்கள் தவறு செய்தது தெரியவந்தால் அடுத்த நிமிடமே தூக்கி எறியப்படுவார்கள்.
அப்படிப்பட்ட மௌலவிகளையும், கோடிக் கணக்கான ரூபாயில் ஆசிரம சாம்ராஜ்யத்தையே நடத்திக் கொண்டிருக்கும் சாமியார்களையும் ஒரே தட்டில் வைத்து விமர்சிப்பது என்பதே கொடுமையானது. ஏற்றுக்கொள்ள இயலாதது.
தவறுகள் நடந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்க மதரஸாக்களில் வழிகள் உண்டு.
ஆனால் சாமியார்களின் சாம்ராஜ்யங்களை யார் தட்டிக் கேட்பது?
-சிராஜுல்ஹஸன்