திங்கள், 23 ஏப்ரல், 2018

​இடம்பெயர்த்தக்கூடிய அடுக்குமாடி கட்டிடத்தை வடிவமைத்து சாதனை! April 22, 2018

Image

இயற்கை சீற்றங்களின் போது மடக்கிய நிலையில் இடம்பெயர்த்தக் கூடிய அடுக்குமாடி கட்டிடத்தை வடிவமைத்து போலந்து கட்டிட கலைஞர் ஒருவர் சாதனை படைத்துள்ளார். 

இட நெருக்கடியின் காரணமாக அடுக்குமாடி குடியிருப்புகள் மக்களிடையே பிரபலம் அடைந்துள்ளது. ஆனால், நிலநடுக்கம் போன்ற இயற்கை சீற்றங்களின் போது அடுக்குமாடி குடியிருப்புகள் இருப்பவர்கள் தான் அதிக பாதிப்பிற்கு உள்ளாவார்கள்.

இந்த நிலையில், ஹீலியம் பலூன் மூலம் ஊதிப் பெரிதாக்கக் கூடிய அடுக்குமாடி கட்டடம் ஒன்றை போலந்தை சேர்ந்த டேமியன் கிரேனோசிக் வடிவமைத்துள்ளார். 

ஆபத்து காலங்களில் இந்த கட்டிடத்தை மடக்கி ஹெலிகாப்டர் உதவியுடன் எளிதாக தூக்கிச் செல்லலாம். இயற்கைப் பேரிடரில் வீடிழந்தோர் தற்காலிக வீடாக இதனை பயன்படுத்த முடியும் என முதற்கட்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.