சனி, 21 ஏப்ரல், 2018

தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மீது வைக்கும் புகார்கள் April 21, 2018

Imageதலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எதிராக, 7 எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து குடியரசுத் துணைத் தலைவரிடம் உரிமை மீறல் தீர்மானம் கொடுத்துள்ளன. இந்த விவகாரத்தில், தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மீது அவர்கள் முன் வைக்கும் புகார்களை தற்போது பார்க்கலாம்..

➤உத்தரப் பிரதேசத்தில் உள்ள பிரசாத் மருத்துவக் கல்லூரிக்கு, மாணவர் சேர்க்கைக்கான அனுமதி ரத்து செய்யப்பட்ட நிலையில், அதை திரும்பப் பெற மத்திய அரசுக்கு உத்தரவிட்டதன் பின்னணியில் முறைகேடு, என குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

➤பிரசாத் மருத்துவக் கல்லூரி விவகாரத்தில், நீதித்துறை செயல்பாட்டில், தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா நடந்து கொண்ட விதம் சரியானது அல்ல என புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

➤தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அரசியல் அமர்வில் இருக்கும் நேரத்தில், அவருக்கு அடுத்த நிலையில் இருக்கும் நீதிபதிகளுக்கு வழக்குகளை ஒதுக்கீடு செய்வதில், விதிகளை பின்பற்றுவதில்லை என்ற குற்றச்சாட்டையும் எதிர்க்கட்சிகள் முன் வைத்துள்ளன.

➤வழக்கறிஞராக பணியாற்றிய போது, போலி பிரமாணப் பத்திரங்களை தாக்கல் செய்து நிலம் ஒதுக்கீடு பெற்றதாக சர்ச்சை எழுந்தது. எனினும், உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு அளிக்கப்பட்ட பின்பே, அந்த நிலத்தை அரசிடம் திரும்ப ஒப்படைத்தார் தீபக் மிஸ்ரா. இதனையும் எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டாக முன் வைத்துள்ளன. 

➤தலைமை நீதிபதி என்ற அதிகாரத்தை பயன்படுத்தி, சில வழக்குகளில் சாதகமான தீர்ப்பை எதிர்பார்த்து, குறிப்பிட்ட அமர்வுகளுக்கு அனுப்பி வைத்ததாகவும், தீபக் மிஸ்ரா மீது புகார் முன்வைக்கப்பட்டுள்ளது.

Related Posts:

  • இரண்டு நிமிடங்கள் செலவு செய்வீர்களா... நம் நாட்டுக்காக ஒரு இரண்டு நிமிடங்கள் செலவு செய்வீர்களா...? ....... சமீப காலமாக விலைவாசி உயர்ந்து விட்டதே என்று அரசைக் குறைக்கூறுவது… Read More
  • 1984-டிசம்பர் 3-ம் தேதி...!!! நினைவிருக்கிறதா..?1984-டிசம்பர் 3-ம் தேதி...!!!போபால் ரயில்வே ஸ்டேஷனில் 'துருவே' என்ற ஸ்டேஷன் மாஸ்டருக்கு இரவு நேரப் பணி. போபால் ஸ்டே… Read More
  • அல் மாயிதா அத்தியாயம் : 5 அல் மாயிதா - உணவுத் தட்டு மொத்த வசனங்கள் : 120 ஈஸா நபி அவர்களின் சமுதாயத்தினர் வானத்திலிருந்து உணவுடன் உணவுத் தட்டை இ… Read More
  • ‎பூமியின்‬ ஆழத்திற்கு செல்ல முடியாத மனிதன் ‪#‎பூமியின்‬ ஆழத்திற்கு செல்ல முடியாத மனிதன் – இஸ்லாத்தை உண்மை படுத்திய புதிய தலைமுறை செய்தி: நாம் வாழுகின்ற இந்த நவீன காலத்தைப் … Read More
  • பார்த்தாலே நேர்வழி ?.   فوز واقبال لمن هداه *ومن راى من اقتدى هداه அவர் யாருக்கு நேர்வழி காட்டினாரோ அவருக்கும் அவரது நேர்வழியைப் பார்த்தவருக்கும் வெற்றியு… Read More