டெல்லி: மோடி ஆட்சியில் ஊழல் அமைச்சர்களின் ஆதிக்கம் நடப்பதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். மக்களின் பணத்தை வைர வியாபாரி நீரவ் மோடி எடுத்துச் சென்றுவிட்டதாக டெல்லியில் ஜன் ஆக்ரோஷ் என்ற பெயரில் மெகா கூட்டத்தில் ராகுல் கூறியுள்ளனர். இந்த கூட்டத்தில் மூத்த தலைவர் சோனியா, மன்மோகன்சிங் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் பங்கேற்றனர். மக்கள் பிரச்சனைக்கு பதில் சொல்லாமல் அமைதி காக்கிறார் நரேந்திர மோடி என ராகுல் காந்தி தெரிவித்தார். ரஃபேல் போர் விமானங்களை இரண்டு மடங்கு விலை கொடுத்து வாங்கியுள்ளார் மோடி என அவர் கூறினார். 8 ஆண்டுகளுக்கு இல்லாத அளவுக்கு வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
ஊழல் புகாருக்கு ஆளானவரை கர்நாடக முதல்வராக்க முயற்சி எடுப்பதாகவும் அவர் தெரிவித்தார். வங்கி பணம் மோசடி செய்த நீரவ் மோடியை மத்திய அரசு காப்பாற்றுவதாக அவர் குற்றம் சாட்டினார். தலித்துகள் மீது நடத்தப்படும் தாக்குதலுக்கு பிரதமர் மோடி அமைதி காக்கிறார் எனவும் அவர் கூறினார். ரூபாய் நோட்டு வாபஸ் மற்றும் ஜிஎஸ்டி சிறு வணிகர்களை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மத்திய அரசு மீது ராகுல்காந்தி குற்றம் சாட்டியுள்ளார். மத்திய அரசின் மீது மக்கள் கடும் கோவத்தில் உள்ளனர் என்று ராகுல் கூறியுள்ளனர். மோடி மீது நம்பிக்கை வைத்திருந்த இளைஞர்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர் என்று அவர் புகார் தெரிவித்துள்ளார்.
மேலும் விவசாயிகள் கடும் நெருக்கடியில் உள்ளனர் என்றும் ராகுல் கூறினார். மேலும் ராகுல்காந்தி கூறியதாவது: பலாத்கார சம்பவங்கள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களால இந்தியாவின் பெயர் சர்வதேச அளவில் கெட்டுப்போய்விட்டது. விவசாய கடன்கள் தள்ளுபடி செய்வது அரசின் கொள்கையில் கிடையாது என நிதியமைச்சர் கூறுகிறார். விவசாய கடனை தள்ளுபடி செய்ய பிரதமர் மறுத்துவிட்டார். ஏழைகள், பெண்கள், சிறுபான்மையினருக்காக காங்கிரஸ் கட்சி உழைக்கிறது. 2014-ம் ஆண்டு இந்தியா முழுவதும் பா.ஜ.க பொய் பிரசாரம் செய்தன. பண மோசடி செய்த நிரவ் மோடி விவகாரம் குறித்து மோடி எதுவும் கூறவில்லை.
மக்களின் பணம் நிரவ் மோடியிடம் பைகளில் உள்ளது. பா.ஜ.க ஆட்சியில் பெண்கள் பாதுகாப்பில்லாமல் உள்ளனர். முக்கிய விவகாரங்களில் மோடி அமைதியாக உள்ளார். டோக்லாமில் சீன படைகள் உள்ளன நிலையில் இந்த விவகாரத்தை எழுப்ப கூட பிரதமர் நினைக்கவில்லை. பிரதமர் சீனாவில் மகிழ்ச்சியாக உள்ளார். இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.