ஞாயிறு, 29 ஏப்ரல், 2018

அழிந்துவரும் இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான பாறை ஓவியங்கள்! April 28, 2018

மேட்டுப்பாளையம் அருகே 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வரையப்பட்ட பழங்கால பாறை ஓவியங்களை பாதுகாக்க அப்பகுதி மக்கள் அரசாங்கத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர். 

மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள பெரியநாயக்கன்பாளையம் வனசரக பகுதிக்கு உட்பட்ட பாலமலையில் பழங்கால பாறை ஓவியங்கள் அதிகளவு காணப்படுகின்றன. இங்குள்ள பெரும்பாலான ஓவியங்கள் இதன் தொன்மை அறியாமல் இப்பகுதிக்கு மலையேற்ற பயிற்சி மற்றும் வன கோவில்களுக்கு வரும் சிலரால் அழிக்கப்பட்டு வருவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. 

எனவே, 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஓவியங்களாக வரையப்பட்ட இந்த ஓவியங்களை தமிழக அரசும், இந்திய தொல்லியல் துறையும் பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Image