சனி, 21 ஏப்ரல், 2018

​தேசிய கடல் சார் மையம் எச்சரிக்கை! April 21, 2018

Image


தென் தமிழக கடற்பகுதியில் 11 அடி உயரத்திற்கு அலைகள் எழக்கூடும் என தேசிய கடல் சார் மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் தென் தமிழக கடலோர பகுதிகளில் தீவிர முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கடல் சீற்றத்தின் காரணமாக கன்னியாகுமரி மற்றும் ராமநாதபுரம் மாவட்டத்தின் கடற்பகுதியில் அலைகள் சீற்றத்துடன் காணப்படும் என்று இந்திய கடல்சார்  தகவல் மையம் எச்சரித்தது. எனவே மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் கடற்கரையோர பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தியது. 

இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் கடலோர பகுதிகளான பாம்பன், மண்டபம், புதுமடம், வேதாளை, தேவிபட்டினம், உச்சிப்புளி, பனைக்குளம் உள்ளிட்ட கடலோர கிராம பகுதிகளை சேர்ந்த நாட்டுப்படகு மீனவர்கள் இன்று கடலுக்கு செல்லவில்லை. 

பாம்பனில் 150-க்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகள் கரைகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அக்னி தீர்த்தக் கடலில் நீராட தடை விதிக்கப்பட்டுள்ளதால் அப்பகுதி, சுற்றுலா பயணிகளின்றி வெறிச்சோடி காணப்படுகிறது.