
பிரான்ஸ் நாட்டின் நன்டே நகரில் அமைக்கப்பட்டுள்ள வித்தியாசமான உயிரியல் பூங்கா அனைவரையும் கவர்ந்துள்ளது. மற்ற உயிரியல் பூங்காவிற்கும் இந்த உயிரியல் பூங்காவிற்கும் என்ன வித்தியாசம் என்றால், இங்குள்ள உயிரினங்கள் அனைத்தும் உயிரற்ற இயந்திரங்கள்.
முழுக்க முழுக்க உலோகத்தினால் உருவாக்கப்பட்ட இயந்திரப் பறவை, இயந்திர பூச்சி மற்றும் மரங்கள் அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்துள்ளது. பறக்கும் இயந்திரப் பறவையை, அதன் கீழ் தொங்கவிடப்பட்டுள்ள நாற்காலியில் அமர்ந்து பறக்கலாம். மேலும், உலோகத்தினால் ஆன சிலந்தி பூச்சி, அங்கு வருபவர்கள் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது.
இதற்கெல்லாம் உச்சகட்டமாக அனைவரையும் வாய் பிளந்து பார்க்க வைக்கிறது இயந்திர யானை. தண்ணீர் பீய்ச்சி அடித்தபடி செல்லும் யானை மீது சுற்றுலா பயணிகள் அமர்ந்த படியே பிரம்மாண்ட பூங்காவை ரசிக்கின்றனர்.