புதன், 25 ஏப்ரல், 2018

காயிதே மில்லத் ஒரு மதவெறியர் - எச்.ராஜா


Image may contain: one or more people

காயிதே மில்லத்தை எச்.ராஜா, ஒருமுறை கூட சந்தித்ததில்லை. அவரோடு பேசியதுமில்லை, பழகியதுமில்லை.
அவரது வாழ்க்கை வரலாற்றைப் பார்த்ததுமில்லை, படித்ததுமில்லை.
எச்.ராஜா எந்தச் சமூகத்தில், எந்த வகுப்பில் பிறந்தாரோ அதே வகுப்பைச் சார்ந்தவர்தான் இவர். 90 வயதைக் கடந்த இந்த முதியவரின் பெயர் கிருஷ்ணமூர்த்தி. பொறியியல் வல்லுனராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். காயிதே மில்லத்தின் அண்டை வீட்டுக்காரர். காயிதே மில்லத் வாழ்ந்த குரோம்பேட்டை தயா மன்ஸிலுக்கு எதிரில் இன்றைக்கும் வாழ்ந்து கொண்டிருப்பவர்.
காயிதே மில்லத்தை அறியாத எச்.ராஜா அவரை மதவெறியர் என்கிறார். அறிந்த கிருஷ்ணமூர்த்தி அய்யர் என்ன சொல்கிறார்?
''எங்களுக்குள் அந்த இந்து-முஸ்லிம்கிற ஃபீலிங்சே கிடையாது. நான் பிராமினா இருந்தா கூட Im very much attached with Qaide Millath. அந்த மாதிரியே பழகிட்டேன் அவர்கிட்ட. அதனால அவர் வீட்டில எனக்கு எல்லா வகையான சுதந்திரமும் இருந்தது. So, His very helpful எனக்கு. காயிதே மில்லத் எனக்கு உதவி செய்தது போல் வேறு யாரும் இங்கு இருக்கிறவர்கள் எனக்கு உதவி செய்யல. அதனால அவரை என்றைக்கும் என்னால் மறக்க முடியாது. அவர் இறந்தபோது அதை என்னால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. ஒரு அன்கான்சியஸ் ஸ்டேஜுக்கே வந்துவிட்டேன்.''
கிருஷ்ணமூர்த்தி அய்யரின் இந்த வாக்குமூலம் ஒன்று போதும்; காயிதே மில்லத் யார் என்பதை உலகம் உணர்வதற்கு!
ஆளூர் ஷாநவாஸ்