ஞாயிறு, 22 ஏப்ரல், 2018

நீட் தேர்வு என்பது இந்திய அரசமைப்புக்கு எதிரானது - வைரமுத்து. April 22, 2018

Image

மத்திய அரசின் பட்டியலில் இருந்து மாநில அரசின் பட்டியலுக்கு கல்வி மாற்றப்படுகின்ற திருநாள்தான், கல்வித்துறைக்கு பெருநாளாக அமையும் என கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.

நாமக்கல் அடுத்த கீரம்பூரில் உள்ள தனியார் பள்ளியின் ஆண்டு விழாவில் பங்கேற்ற கவிஞர் வைரத்து, மாணவர்கள், பெற்றோர் மத்தியில் உரையாற்றினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நீட் தேர்வு என்பது இந்திய அரசமைப்புக்கு எதிரானது என்று கல்வியாளர்கள் கருதுவதாக குறிப்பிட்டார். பள்ளிக் கல்வியில் இருந்து மாணவர்களின் அறிவுத்திறனை சோதித்து அவர்களை தேர்வு செய்ய வேண்டும் எனவும் வைரமுத்து வலியுறுத்தினார். 
 
((பள்ளி இறுதி வரைக்கும் பயின்று அவர்கள் பெற்ற அறிவில் இருந்து மாணவர்கள் 
தேர்ந்தெடுக்க பட வேண்டும் என்பது எங்களின் கோரிக்கை. கல்வி என்பது மத்திய 
அரசின் பட்டியலில் இருந்து மாநில அரசின் பட்டியலுக்கு மாற்றப்படுகி்ற திருநாள் 
தான் கல்விக்கு பெரு நாள் என்றார்.