கெங்கவல்லி அரசு மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவில் உள்ள மருந்து பெட்டகத்தில் காலாவதியான மருந்துகள் இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் கெங்கவல்லி அரசு மருத்துவமனைக்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான நோயாளிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில், மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவிலும், பிரசவ அறையிலும் 2018ம் ஆண்டு பிப்ரவரி 2-ம் தேதிக்குள் மேல் பயன்படுத்த இயலாத, காலாவதியான டைகுளோபினாக் சோடியம் இன்ஜெக்ஷ்ன் மருந்து இருப்பது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருவதால் நோயாளிகள் அச்சமடைந்துள்ளனர். காலாவதியான மருந்துகளை செலுத்தினால், நோயாளிகளுக்கு ஆபத்து ஏற்படும் என்றும் மருத்துவர்கள் அலட்சியத்தோடு செயல்படாமல் காலாவதியான மருந்துகளை கண்டறிந்து அகற்ற வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.