திங்கள், 23 ஏப்ரல், 2018

புதிய பாடத்திட்டம் குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் விளக்கம்! April 23, 2018

Image

புதிய பாடத்திட்ட மாற்றத்தில் வேளாண்மை, தோட்டக்கலைத்துறை, பின்னலாடை உள்ளிட்ட அனைத்தும் இடம்பெறும் என்று, தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் ஓராண்டு சாதனை விளக்கக ண்காட்சியை திறந்து வைத்த பின்னர், அவர் செய்தியாளர்களுக்கு அளித்த  பேட்டியில் இதனை தெரிவித்தார். பாடத்திட்ட மாற்றங்கள் அனைத்தும், மாணவர்களின் எதிர்காலத்தை பாதுகாக்கும் வகையில் இருக்கும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். 

மேலும், 412 மையங்களில் நீட் உள்ளிட்ட அனைத்துத் தேர்வுகளுக்கும்  பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாக கூறிய அவர், இந்தாண்டு மூன்றாயிரம் பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் கொண்டுவர முடிவு செய்து அந்தப் பணிகள் மேமாத இறுதிக்குள் துவங்கப்படும் என்றும் தெரிவித்தார்.