கடல் சீற்றம் தொடர்ந்து காணப்படும் என்பதால் கன்னியாகுமரி மற்றும் ராமநாதபுர மாவட்ட மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில், வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒர் இரு இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கூடலூரில் 2 சென்டிமீட்டர்
மழை பதிவாகியுள்தாகவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
கிருஷ்ணகிரி, தருமபுரி, வேலூர்,சேலம், நாமக்கல், திருச்சி, உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று வழக்கத்தை விட 2 அல்லது 3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகமாக இருக்கும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
கடந்த 20ம் தேதி கடலில் ஏற்பட்டுள்ள தொலைத்தூர சலனங்களால் ஏற்படும் கடல் சீற்றம் இன்று இரவு வரை நீடிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மீனவர்கள் கன்னியாகுமரி, ராமநாதபுரம் பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.