மஹாராஷ்டிர மாநிலம் போரியா வனப்பகுதியில் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 14 நக்சலைட்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
மஹாராஷ்டிர மாநிலம், கட்ச்ரோலி மாவட்டம் போரியா வனப்பகுதியில் நக்சலைட்டுகள் நடமாட்டம் பல ஆண்டுகளாகவே இருந்து வருகிறது.
சீனாவின் Mao Zedong எனும் புரட்சியாளரின் உந்துதலின் பேரில் கடந்த பல ஆண்டுகளாக இந்திய அரசை எதிர்த்து கிளர்சியில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நக்சலைட்டுகள் நடமாட்டம் குறித்து கிடைத்த ரகசியத் தகவலின் பேரில் அந்த பகுதியில் காவல்துறையினர் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.
தேடுதல் வேட்டையின் போது போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 14 நக்சலைட்டுகள் சுட்டுகொல்லபட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
அடர்ந்த காட்டுப்பகுதியில் இது Tendu எனப்படும் இலைகள் உருவாகும் காலமாகும். இந்த இலைகள் பீடி உள்ளிட்டவை தயாரிப்பில் மூலப் பொருளாக உள்ளது. இது அப்பகுதியில் முக்கிய வாழ்வாதாரமாக இருந்து வருகிறது. இதுவே நக்சல்களின் வருமான வரத்தாகும் இருந்து வருகிறது. இத்தொழிலில் ஈடுபடுவோரை மிரட்டி பணம் பறிப்பதில் நக்சலைட்டுகள் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.
தற்போது 13 நக்சலைட்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டிருப்பது நக்சல் ஒழிப்பில் முக்கிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது. இறந்தவர்களில் சில முக்கிய நக்சல் தலைவர்களும் இருக்கலாம் என கூறப்படுகிறது.
இதனைத்தொடர்ந்து, அப்பகுதியில் காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.