வியாழன், 19 ஏப்ரல், 2018

​கீழடியில் நான்காம் கட்ட அகழாய்வு பணிகள் துவக்கம்! April 19, 2018

Image

கீழடியில் நான்காம் கட்ட அகழாய்வு பணிகளை தொல்லியல் துறையினர் தொடங்கியுள்ளனர். 

சிவகங்கை மாவட்டம் கீழடியில் கடந்த 2015-ம் ஆண்டு நடத்தப்பட்ட அகழாய்வுப் பணியின்போது, இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தமிழர்கள் பயன்படுத்திய அரசு முத்திரை, முத்துகள், பானை ஓடுகள் உள்ளிட்டவை கண்டறியப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, 2016-ம் ஆண்டு ஜனவரி முதல் நவம்பர் வரை  நடந்த 2-ம் கட்ட அகழாய்வில் கட்டடங்கள், வடிகால் வாய்க்கால்கள், உறை கிணறு உள்ளிட்டவை கண்டறியப்பட்டன. 

மூன்றாம் கட்ட அகழாய்வு பணிகள், பெயரளவுக்கு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், தற்போது நான்காம் கட்ட அகழாய்வு பணிகள், தமிழக தொல்லியல்துறை இயக்குநர் சிவானந்தம் தலைமையில் தொடங்கியுள்ளது. இதில் நாள்தோறும் 40-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.