செவ்வாய், 17 ஏப்ரல், 2018

இந்தியாவின் மொத்த விலை பணவீக்கம் (WPI) சரிவு! April 16, 2018

Image

உணவுப் பண்டங்களின் விலைகளில் ஏற்பட்ட சரிவு காரணமாக இந்தியாவின் மொத்த விலை பணவீக்கம் (Wholesale Price Inflation) கடந்த மார்ச் மாதத்தில் 2.47 சதவிகிதமாக குறைந்துள்ளது.

கடந்த ஆண்டு மார்ச் மாத காலகட்டத்தில் மொத்த விலை பணவீக்கம் (Wholesale Price Inflation) 5.11% ஆக இருந்தது, 

இந்நிலையில் இந்த ஆண்டில் மார்ச் மாதத்தில் மொத்த விலை பணவீக்கம் 2.47% ஆக குறைந்துள்ளது.
இந்த பணவீக்க விகிதம் கடந்த 8 மாதங்களில் இல்லாத அளவிற்கு குறைவானதாகும்.

கடந்த மார்ச் மாதத்தில், உணவுப் பொருட்கள் பணவீக்கம், 0.29 சதவீதமாக குறைந்துள்ளது. இது, பிப்ரவரி மாதத்தில் 0.88% ஆகவும், ஜனவரியில், 3 சதவீதமாகவும் அதகரித்து காணப்பட்டது.

இதே காலத்தில், காய்கறிகள் பணவீக்கம், பிப்ரவரியில் மார்ச்சில் 15.26 சதவீதமாக குறைந்துள்ளது.

வெங்காயம் விலை சற்று குறைந்த நிலையில், உருளைக்கிழங்கு விலை அதிகரித்துள்ளது. பருப்பு வகைகளின் விலை, 20.58 சதவீதம் பின்னடைவைக் கண்டுள்ளது. 

அது போல, கோதுமை, தானியங்கள், முட்டை, மாமிசம், மீன் ஆகியவற்றின் பணவீக்கம் குறைந்துள்ளது.

சில்லரை விலை பணவீக்கம்:

இதே போல சில்லரை விலை பணவீக்கம் (Consumer Price Index)5 மாதங்களில் இல்லாத அளவாக 4.28 சதவீதமாக குறைந்துள்ளது.

பங்குச்சந்தையில் தாக்கம்:

மொத்த விலை பணவீக்கம்,  சில்லரை விலை பணவீக்கம் மற்றும் இந்தியாவின் தொழில் உற்பத்தி கடந்த பிப்ரவரி மாதத்தில் எதிர்பார்த்ததை விட அதிகமாக 7.1 சதவிகிதம் வளர்ந்ததாலும் பங்குச் சந்தையில் 8வது நாளாக ஏற்றம் காணப்பட்டது.