திங்கள், 30 ஏப்ரல், 2018

தொமுச உறுப்பினர்கள் சாலை மறியல் போராட்டம்! April 30, 2018

Image

சென்னையில் போக்குவரத்து துறை கூட்டுறவு சங்க தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் ஒரு தலை பட்சமாக நடைபெறுவதாக கூறி தொமுசவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழகத்தில் மூன்றாம் கட்ட கூட்டுறவு சங்க தேர்தல் மே 7-ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியது. அதில் போக்குவரத்து துறைக்கான கூட்டுறவுச் சங்கத்தின் வேட்பு மனு தாக்கல் பல்லவன் இல்லத்தில் நடைபெற்றது. இதில் அண்ணா தொழிற்சங்கத்தை சேர்ந்தவர்களுக்கும், தொமுச சங்கத்தை சேர்ந்தவர்களுக்கும் இடையே கடும் தள்ளு முள்ளு ஏற்பட்டது. 

இதனால் அவர்களை காவல் துறையினர் கட்டுப்படுத்தினர். இந்நிலையில் தேர்தல் அதிகாரி ஆளும் கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதாகவும், வேட்பு மனுக்களை விநியோக்கிகாமல் காலம் தாழ்த்துவதாகவும் கூறி தொமுச தொழிற்சங்கத்தை சார்ந்தவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Related Posts: