வியாழன், 19 ஏப்ரல், 2018

பேராசிரியை நிர்மலாதேவி விவகாரம்: விஜயகாந்த் கண்டனம் April 19, 2018

Image

பேராசிரியை நிர்மலாதேவி விவகாரத்தில் பின்னணியில் உள்ள “பசுத்தோல் போர்த்திய புலிகள்” யார், யார் என்பதை கண்டறிய வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், குழந்தைகள் முதல் கல்லூரியில் படிக்கும் மாணவ, மாணவிகள் வரை சரியாக வழிநடத்த வேண்டிய ஆசிரியர்கள் இதுபோன்ற தவறான பாதைக்கு மாணவிகளை அழைத்துச் செல்வது “வேலியே பயிரை மேய்வது” போன்று உள்ளது என தெரிவித்துள்ளார். 

ஒரு பேராசிரியர் இவ்வளவு தைரியமாக செயல்பட்டிருக்கின்றார் என்றால் அரசியல்வாதிகள், உயரதிகாரிகள் இதன் பின்னனியில் நிச்சயம் இருக்கின்றார்கள் என்பது சந்தேகிக்கத் தோன்றுகிறது என்றும் விஜயகாந்த் கூறியுள்ளார். 

இதனால் அவரின் பின்னணியில் உள்ள “பசுத்தோல் போர்த்திய புலிகள்” யார், யார் என்பதை கண்டறிய, நீதிமன்றமே தானாக முன்வந்து தனது நேரடி கண்காணிப்பில் விசாரணை குழு அமைக்க வேண்டும் எனவும் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். 

Related Posts: