திங்கள், 30 ஏப்ரல், 2018

​இன்று மாலை ஆளுநரை சந்திக்கிறார் முதல்வர் பழனிசாமி! April 30, 2018

Image

முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று மாலை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்திக்க உள்ளார். 

ஆளுநர் மாளிகையில் மாலை 5 மணியளவில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்கும் முதல்வர் பழனிசாமி, அதைத் தொடர்ந்து ஆளுநரை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது. 

காவிரி விவகாரம் தொடர்பான வரைவு செயல்திட்டத்தை மே 3ம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, ஆளுநரை சந்திக்க உள்ளார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி, பிரதமரிடம் வலியுறுத்துமாறு, ஆளுநரிடம் முதல்வர் வேண்டுகோள் விடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Posts: