
பா.ஜ.க. தேசிய செயலர் ஹெச். ராஜா மீது கள்ளக்குறிச்சி நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் 55 வழக்கறிஞர்கள் தனித்தனியே வழக்கு தொடர்ந்துள்ளனர்.
கடந்த 4-ம் தேதி, திமுக தலைவர் கருணாநிதி மற்றும் திமுக எம்.பி., கனிமொழி குறித்து ஹெச். ராஜா ட்விட்டரில் அவதூறான கருத்தை பதிவிட்டிருந்தார்.
இதன் மூலம் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்த எச்.ராஜா முயற்சிப்பதாகக் கூறி, அவர் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டதாக வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.