Lateral entry’ into bureaucracy: reason, process, and controversy : இந்த மாத துவக்கத்தில், யு.பி.எஸ்.சி., மூன்று இணைச்செயலாளர்கள் மற்றும் மத்திய அரசின் துறைகளில் பணியாற்ற 27 இயக்குநர்கள் பதவிக்கான விண்ணப்பங்களைக் கோரி விளம்பரத்தை வெளியிட்டிருந்தது. தேசத்தை கட்டியெழுப்ப, பங்களிக்க தயாராக இருக்கும் திறமையான நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என்று அதில் கூறப்பட்டிருந்தது.
லேட்டர் எண்ட்ரி மூலமாக பணிக்கு வரும் நபர்கள் அரசின் செயலகத்தில் மூன்று முதல் ஐந்தாண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றுவார்கள். இந்த பதவிகளுக்கு இட ஒதுக்கீடு கிடையாது. அதாவது எஸ்.சி., எஸ்.டி, மற்றும் ஒ.பி.சி. ஒதுக்கீடுகள் ஏதும் கிடையாது.
அரசு பதவிகளில் லேட்டர் எண்ட்ரி என்றால் என்ன?
2017ம் ஆண்டு நிதி ஆயோக் மற்றும் செயலக துறைசார் குழுக்கள் நிதி ஆயோக்கின் செயல் நிகழ்ச்சி நிரலில், மத்திய அரங்காத்தில் நடுத்தர மற்றும் மூத்த நிர்வாக மட்டங்களில் பணியாளர்களை நியமிக்க பரிந்துரை செய்தது. இந்த லேட்டர் எண்ட்ரி பணியாளர்கள் மத்திய அரசின் செயல்கங்களில் பணியாற்றுவார்கள். பொதுவாக அனைந்திந்திய அளவில் நடைபெறும் சிவில் சர்வீஸ் தேர்வுகளில் வெற்றி பெற்ற நபர்கள் மட்டுமே இங்கு பணியாற்ற முடியும். ஒரு துறையில் அமைச்சரவை நியமனக்குழுவால் ( Appointments Committee of the Cabinet (ACC)) நியமிக்கப்படும் மூன்றாவது உயர் பொறுப்பு மிக்க பதவி இணைச் செயலாளர் பதவியாகும். செயலாளர், கூடுதல் செயலாளர் பொறுப்புகளுக்கு பிறகு இந்த பொறுப்பு முக்கியமாக பார்க்கப்படுகிறது. இயக்குநர்கள் இணைச் செயலாளர் பதவிக்கு கீழே உள்ள தரவரிசை ஆகும்.
லேட்டர் எண்ட்ரிக்கான அரசின் காரணங்கள் என்ன?
DoPT துறையின் இணை அமைச்சர் ஜித்தேந்திர சிங், 2019ம் ஆண்டு ஜூலை 4ம் தேதி அன்று, நாடாளுமன்ற மாநிலங்களவையில், “அரசாங்கம், ஒரு துறையில் ஒரு நபர் பெற்றிருக்கும் அறிவு மற்றும் நுட்பத்தினை கருத்தில் கொண்டு அவ்வபோது , மிகவும் முக்கியமான நபர்களுக்கு குறிப்பிட்ட பணிகளை ஒதுக்கியுள்ளது. அதே சபையில் அதே போன்ற ஒரு கேள்விக்கு பதில் கூறிய அவர், இரண்டு முக்கியமான நோக்கங்களை கருத்தில் கொண்டு லேட்டர் எண்ட்ரி உருவாக்கப்பட்டுள்ளது. ஒன்று புதிய திறமைகளை வெளிக்கொணர்வது மற்றொன்று இருக்கும் மனித வளத்தை பயன்படுத்திக் கொள்வது.
அரசு இதுவரை லேட்டர் எண்ட்ரி மூலமாக அதிகாரிகளை நியமித்துள்ளதா?
இது போன்ற புதிய அதிகாரிகளை சேர்ப்பதற்கான இரண்டாம் சுற்று நடவடிக்கைக்கான விளம்பரம் தான் அது. முன்பு பல்வேறு துறைகளில் 10 இணைச்செயலாளர் பதவிகளையும், துணை செயலாளர் மற்றும் இயக்குநர் மட்டங்களில் 40 பதவிகளுக்கும் ஆட்களை நியமிக்க அரசு முடிவு செய்தது. இணை செயலாளர் மட்டங்களில் நியமனங்களுக்காக 2018ம் ஆண்டு விளம்பரம் வெளியிடப்பட்டது. இதில் 6077 நபர்கள் விண்ணப்பித்தனர். யு.பி.எஸ்.சி. இந்த விண்ணப்பங்களைபரிசீலித்து 9 நபர்களை பரிந்துரை செய்தது. அவர்கள் 2019ம் ஆண்டு ஒன்பது வெவ்வேறு அமைச்சரவையில் பணியாற்ற பரிந்துரை செய்யப்பட்டனர்.
அதில் ககோலி கோஷி பணியில் சேரவில்லை. அம்பர் துபே, ராஜீவ் சக்சேனா, சுஜித் குமார் பாஜ்பாய், தினேஷ் தயானந்த் ஜக்தலே, புஷன் குமார், அருண் கோயெல், சௌரப் மிஷ்ரா, மற்றும் சுமன் பிரசாத் சிங் ஆகியோர் பணியில் சேர்ந்தனர். அதில் அருண் கோயல் கடந்த டிசம்பரில் பணியில் இருந்து விலகி தனியார் துறையில் மீண்டும் சேர்ந்தார்.
லேட்டர் எண்ட்ரி ஏன் விமர்சனத்திற்கு ஆளாகிறது?
எஸ்.சி., எஸ்.டி. மற்றும் ஒ.பி.சி.க்களை பிரதிநிதித்துவப்படுத்தும் குழுக்கள், இந்த நியமனங்களில் இட ஒதுக்கீடு இல்லை என்று போராட்டங்களை நடத்துகின்றனர். நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 5ம் தேதி அன்று, இயக்குநர்கள் மற்றும் இணை செயலாளர் பதவிகளுக்கான விண்ணப்பங்களை வரவேற்கும் அறிவிப்பினை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். விருப்பம் உள்ளவர்கள் பிப்ரவரி 6ம் தேதி முதல் மார்ச் 22ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. பீகார் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ், யுபிஎஸ்சி தேர்வு நடைமுறை ‘தேசத்தைக் கட்டியெழுப்ப’ விருப்பமுள்ள, உந்துதல் மற்றும் திறமையான வேட்பாளர்களை உறுதிப்படுத்தத் தவறிவிட்டதா அல்லது பின்தங்கிய பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டினை குறைக்க இது பயன்படுத்தப்படுகிறதா என்று கேள்வி எழுப்பினார்.
முன்னாள் உ.பி. முதல்வர் அகிலேஷ் யாதவ், பாஜக தங்கள் சொந்த மக்களை புறவாசல் வழியாக உள்ளே அழைத்து வருகிறது. பல ஆண்டுகளாக பரீட்சைக்கு தயாராகும் மக்களைப் பற்றி யார் கவலைப்படுகிறார்கள்? என்று கேள்வி எழுப்பினார்.
இந்த நியமனங்களில் இட ஒதுக்கீடு இல்லையா?
மே 15ம் தேதி அன்று, 2018 DoPT துறை வெளியிட்ட சுற்றறிக்கையில் 45 நாட்கள் அல்லது அதற்கு மேற்பட்ட நாட்கள் மத்திய அரசின் கீழ் இருக்கும் தற்காலிக நியமனங்களில் எஸ்.சி/எஸ்.டி/ ஓபிசி இட ஒதுக்கீடு இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இது செப்டம்பர் 24, 1968 வரை உள்துறை அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட ஒரு சுற்றறிக்கையின் – OBCக்களையும் இணைத்து வெளியிடப்பட்ட மறுபரிசீலனை ஆகும்.
ஆனால் இந்த லேட்டர் எண்ட்ரியில் இடஒதுக்கீடு இல்லை என்று கூறப்படுவதற்கு காரணங்கள் உள்ளன. 13 புள்ளி பட்டியலில், மூன்று பதவிகள் வரை இட ஒதுக்கீடு இல்லை. இந்தியன் எக்ஸ்பிரஸ்க்கு டி.ஒ.பி.டி வழங்கிய குறிப்புகளில், “ஒரே ஒரு பதவிக்கு இட ஒதுக்கீடு பொருந்தாது. இந்த திட்டத்தின் கீழ் நிரப்பப்பட வேண்டிய ஒவ்வொரு பணியிடமும் ஒற்றை பதவியாக இருப்பதால் இட ஒதுக்கீடு தேவையில்லை” என்று கூறப்பட்டிருந்தது.
2019ம் ஆண்டில் நியமிக்கப்பட்ட 9 பேரும் தனித்தனியாக நியமிக்கப்பட்டனர். அவர்கள் ஒரு குழுவாக 9 நபர்களாக கருதப்பட்டிருந்தால் இரண்டு இடங்கள் ஓ.பி.சிக்காகவும், ஒரு இடம் எஸ்.சிக்காகவும், மத்திய அரசின் இடஒதுக்கீடு விதிகள் படி ஒதுக்கியிருக்க வேண்டும்.
தற்போது வெளியிடப்பட்டிருக்கும் விளம்பரத்தின் படி 27 இயக்குநர்கள் ஒரு குழுவாக நியமிக்கப்பட்டிருந்தால், 7 பதவிகள் ஓ.பி.சிக்கும், நான்கு பதவிகள் எஸ்.சிக்கும், ஒன்று எஸ்.டி.க்கும், இரண்டு பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்சாதி பிரிவினருக்கும் என்று இட ஒதுக்கீடு வழங்கப்பட்டிருக்கும். ஆனால் விளம்பரத்தில் இது ஒவ்வொன்றும் தனித்தனி நியமனமாக கருதப்படுவதால் அதில் இட ஒதுக்கீடு இல்லை என்றூ கூறப்பட்டுள்ளது.
source : https://tamil.indianexpress.com/explained/lateral-entry-into-bureaucracy-reason-process-and-controversy-250137/