செவ்வாய், 2 மார்ச், 2021

அமைச்சருக்கு கொரோனா பரிசோதனை: 3 நாளில் 3 விதமான ரிசல்ட் வந்த மர்மம்

 பஞ்சாப் மாநில பட்ஜெட் அமர்வு இன்று திங்கள்கிழமை முதல் தொடங்க உள்ளதுஇந்த நிலையில் அம்மாநில சிறை மற்றும் ஒத்துழைப்பு துறை அமைச்சர் சுக்ஜீந்தர் சிங் ரந்தாவா (62) – வுக்கு அடுத்தடுத்து எடுக்கப்பட்ட கோவிட் பரிசோதனையில் பாசிட்டிவ் மற்றும் நெகடிவ் என இரு வேறு முடிவுகள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் சுக்ஜீந்தர் சிங் ரந்தாவாவிடம் மூன்று நாட்களுக்கு முன்பாக எடுக்கப்பட்ட மாதிரிகளில் ஒன்று அரசு ஆய்வகத்திலும்மற்றொன்று தனியார் ஆய்வகத்திலும் சோதனை மேற்கொள்ளப்பட்டதுஇதில் அரசு ஆய்வகத்தில் மேற்கொள்ளப்பட்ட  சோதனையில்  கோவிட்பாசிட்டிவ் எனவும்தனியார் ஆய்வகத்தில் மேற்கொள்ளப்பட்ட  சோதனையில்  கோவிட்நெகடிவ் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இது குறித்து இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழிடம் அமைச்சர் சுக்ஜீந்தர் சிங் ரந்தாவா கூறுகையில், “பட்ஜெட் கூட்டத்தொடருக்கு முன்னபாக அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் கொரோனா பரிசோதனை எடுப்பது கட்டாயம் எனத் தெரிவித்திருந்தார்கள்அதன்படி பிப்ரவரி 25 அன்று சண்டிகரில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் விடுதியில் என்னுடைய மாதிரிகளை வழங்கினேன்பின்னர் பிப்ரவரி 26 அன்று மொஹாலியில் உள்ள பஞ்சாப் பயோடெக்னாலஜி இன்குபேட்டரில் உள்ள அரசு ஆய்வகத்திலிருந்து பெறப்பட்ட சோதனை முடிவுகளின் படி கோவிட்பாசிட்டிவ் என அறிவிக்கப்பட்டது. 

ஆனால் பிப்ரவரி 27 அன்று சண்டிகரில் உள்ள அதுலயா ஹெல்த்கேர் பிரைவேட் லிமிடெட் என்ற தனியார் ஆய்வகத்தில் என்னை மீண்டும் பரிசோதித்துக் கொண்டேன்அவர்கள் கொடுத்த சோதனை அறிக்கையில் கோவிட்நெகடிவ் என குறிப்பிடப்பட்டுள்ளதுஇந்த இரு வேறு  முரண்பாடான முடிவுகளால்” மிகவும் அதிர்ச்சியடைந்துள்ளேன்” என்று கூறியுள்ளார். 

இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தான் அமைச்சர் சுக்ஜீந்தர் சிங் ரந்தாவா கொரோனா பரிசோதனை எடுத்துக்கொண்டார். “கோவிட் – பாசிட்டிவ் முடிவைக் கண்டு நான் மிகவும் அதிர்ச்சியடைந்தேன்.  ஏனென்றால் நான் ஐந்து மாதங்களுக்கு முன்பு சோதித்ததில் கோவிட் – பாசிட்டிவ் என தெரிவிக்கப்பட்டதுஅதன்பிறகு நோய் எதிர்ப்பு சக்தியை என உடல் மேம்படுத்தி இருக்கும். 

அப்படி இருக்கையில் இவ்வளவு குறுகிய காலத்தில் மீண்டும்கோவிட் – பாசிட்டிவ்’ என முடிவு வந்துள்ளதுஇந்த மூன்று அறிக்கைகளையும் சுகாதார அமைச்சர் பல்பீர் சிங் சித்துவிடம் அனுப்பி என்ன நடக்கிறது என்று கேட்டேன்அவரும் அதிர்ச்சியடைந்துள்ளார். 

இவ்வளவு சீக்கிரம் மீண்டும் கோவிட் – பாசிட்டிவ் பரிசோதனை செய்ய முடியாது என்று தனது மருத்துவர்களும் கூறியதாக அமைச்சர் பல்பீர் சிங் சித்து கூறினார்என் மருத்துவர்களின் வற்புறுத்தலின் பேரில் தான் நான் மீண்டும் பரிசோதனை செய்ய முடிவு செய்தேன் என்று கூறியுள்ளார்.

அரசு ஆய்வகத்திலிருந்து வெளியிடப்பட்ட பரிசோதனை முடிவில்ஏன் தனக்கு மட்டும் கோவிட் – பாசிட்டிவ் உள்ளது என்று கையால் எழுதப்பட்டது என்றும் மற்றவர்களின் முடிவுகள் “தட்டச்சு செய்யப்பட்டவை” என்றும்  கேள்வி எழுப்பியுள்ளார். 

இப்படி அரசு ஆய்வகத்தில் நடத்துள்ளது “கடுமையான குறைபாடு” என்றும் அமைச்சர் ரந்தாவா குறிப்பிட்டுள்ளார்அதோடு இந்த விஷயம் குறித்து  சுகாதார அமைச்சருடன் பேசியதாகவும்மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி அமைச்சரான சோனியுடன் விவாதிக்கவில்லை என்றும் கூறியுள்ளார்மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி அமைச்சரான  ஓ பி சோனியின் மேற்பார்வையில் தான் கொரோனா சோதனை நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்க ஒன்று. 

இது எப்படி நடந்தது என்று எனக்குத் தெரியாதுஇது ஒரு முழுமையான குழப்பமாக இருந்ததுஎனக்கு எந்த அறிகுறிகளும் இல்லைஐந்து மாதங்களுக்கு முன்பு தான் பரிசோதனை எடுக்கப்பட்டதுஅதோடு எனக்கு  எந்த உடல்நலப் பிரச்சினை இல்லைநான் பட்ஜெட் கூட்டத் தொடரில் (விதான் சபா அமர்வுகலந்து கொள்ள வேண்டியிருந்ததால் மட்டுமே சோதனை செய்து கொண்டேன்இது மிகவும் மோசமான குறைபாடுகோவிட் -19 – க்கு நீங்கள் எடுக்கும் மருந்துகளின் பல பக்க விளைவுகள் உள்ளன. 

இன்று காலை முதல் இது ஒரு பெரிய பிரச்சினையாக உள்ளதுஅவரது (சோனியின்துறை அதிகாரிகள் ஏன் அவருக்கு இன்னும் தகவல் தெரிவிக்கவில்லைஇவ்வளவு பெரிய குறைபாடு எப்படி நடந்தது என்பதை அவர் அறிந்திருக்க வேண்டும்இது குறித்து அவர் என்னை முன்பே தொடர்பு கொண்டிருக்க வேண்டும்நான் அல்ல” என்று அமைச்சர் ரந்தாவா கூறியுள்ளார். 

அரசு ஆய்வகத்தில் சோதனை செய்வதில் ஏதேனும் குறைபாடு உள்ளதா என்று பரிசோதித்து வருவதாக மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி முதன்மை செயலாளர் டி கே திவாரி தெரிவித்துள்ளார்.

இது குறித்து இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் பேசிய திவாரி, “ரஞ்சாவாவின் மாதிரி பஞ்சாப் பயோடெக்னாலஜி இன்குபேட்டர் ஆய்வகத்தில் மற்ற எல்லா மாதிரிகளுடனும் (எம்.எல்.ஏ ஹாஸ்டலில் இருந்து எடுக்கப்பட்டதுசோதிக்கப்பட்டதுஇதன் விளைவாகபாசிட்டிவ்’ என இருந்திருக்கலாம்இன்னும் ஓரிரு நாட்களில் மீண்டும் சோதனை செய்தால் வேறு முடிவு கிட்டலாம்மேலும் சி.டி மதிப்பின் படி ரஞ்சாவாவின் உடலில் வைரஸ் சுமை குறைவாக இருந்ததுஎனவே சோதனையின் போது பாசிடிவ் என முடிவு வந்துள்ளதுஆனால் இன்னும்அரசாங்க ஆய்வகத்தின் சோதனை முறைமையில் எந்த குறைபாடும் இல்லை என்பதை உறுதிப்படுத்தஅவருடைய மாதிரியின் சோதனையின் முழு சங்கிலியையும் நாங்கள் மறுபரிசீலனை செய்து வருகிறோம்எங்கள் பங்கில் ஏதேனும் குறைபாடு ஏற்பட்டதா என்று மீண்டும் சோதிக்கப்பட்டு வருகிறது” என்று  தெரிவித்துள்ளார்.

அமைச்சர் ரந்தாவாவின் பரிசோதனை முடிவு ‘பாசிட்டிவ்’ என ‘கையால் எழுதப்பட்டது’ என்று கேட்டதற்கு,  உண்மையில் இது குறுக்கு சோதனை இல்லாமல் அவசரமாக தட்டச்சு செய்வதற்கு பதிலாகசரியான சரிபார்ப்பிற்குப் பிறகு கவனமாக கையால் எழுதப்பட்டுள்ளது  என்பது பாராட்டத்தக்க விஷயம்.” திவாரி கூறியுள்ளார். 

சுகாதார அமைச்சர் பல்பீர் சிங் சித்துவின் தனது துறை தான் அனைவரிடத்திலும் மாதிரிகளை சேகரித்தது என்றும்அதே வேளையில்மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி அமைச்சரான ஓ பி சோனியின் துறையால் சோதனை கவனிக்கப்பட்டது என்றும் சுகாதார அமைச்சர் பல்பீர் சிங் சித்து தெரிவித்துள்ளசர். 

இது குறித்து மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி அமைச்சரான ஓ பி சோனியை தொடர்பு கொண்டு கேட்ட போது, ​​“இது குறித்து  எனக்குத் தெரியாதுஅதோடு அமைச்சர் ரந்தாவா இது குறித்து என்னுடன் ஏதும் விவாதிக்கவில்லை” என்று கூறியுள்ளார் 

source : https://tamil.indianexpress.com/india/india-news-in-tamil-3-reports-in-3-days-punjab-minister-sukhjinder-singh-randhawa-tests-positive-negative-250156/