புதன், 5 மே, 2021

சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி மரணம்

 

தமிழகத்தில் பல்வேறு பொதுநல வழங்குகள் தொடர்ந்து பல பிரச்சினைகளுக்கு தீர்வு கொடுத்தவர் டிராபிக் ராமசாமி.  கடந்த 1934 செய்யாறில பிறந்த இவர், நூல் ஆலை மேற்பார்வையாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். சென்னை பாரிமுனையில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணிக்காக காவல் துறை சார்பில் இவருக்கு ஒரு அடையாள அட்டை வழங்கப்பட்டது. அன்று முதல் மக்களிடத்தில் இவர் டிராபிக் ராமசாமி என்று அறிப்பட்டார்.

சென்னையில் அதிக எடை ஏற்றிக்கொண்டு கட்டுப்பாடு இல்லாமல் செல்லும் வாகனங்களுக்கு எதிராக பொதுநல வழக்கு தொடர்ந்த இவர், அந்த வழக்கில் வெற்றியும் கண்டார். அதனைத் தொடர்ந்து சென்னையில் அனுமதி பெறாமல் அடுக்குமாடி குடியிறுப்புகளை கட்டிய பெரும் முதலாளிகளுக்கு எதிராக வழக்கு தொடர்ந்து வெற்றி கண்ட இவர், அடுத்தடுத்து பல பொதுநல வழங்குகளை தொடர்ந்து மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றார்.

2009-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தென்சென்னை தொகுதியிலும், 2015-ம் ஆண்டு ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலிலும் சுயேச்சையாக போட்டியிட்டு தோல்வியடைந்தார். இவர் தொடர்ந்த பொதுநல வழங்குகளால் பாதிக்கப்பட்ட ஒரு சிலர் பலமுறை இவர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். மேலும் சென்னை வேப்பேரி காவல்நிலையத்தில் இவர் மீது வீரமணி என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் இவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இவரது வாழ்க்கை வரலாறு திரைப்படமாக எடுக்கப்பட்டது. இதில் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் டிராபிக் ராமசாமி கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படம் 2018-ம் ஆண்டு திரைக்கு வந்தது.

இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னை ராஜீவ்காந்தி மருத்தவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவர், சிகிச்சை பலனின்றி இன்று மரணமடைந்தார்.அவரது மறைவுக்கு சமூகவலைதளங்களில் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

source : https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-social-activist-traffic-ramasamy-passed-away-300005/