புதன், 5 மே, 2021

புதிய கட்டுப்பாடுகள்; தமிழகத்தில் நாளை முதல் அனுமதிக்கப்பட்ட பணிகள் எவை?

 தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்குநாள் தீவிரமடைந்து வரும் நிலையில், தினசரி பாதிப்பு எண்ணிக்கை 20 ஆயிரத்தை கடந்து வருகிறது. இந்த வைரஸ் பாதிப்பை கட்டப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் தடுப்பூசி போடும் பணியும் முழுவீச்சில் நடைபெற்று வந்தாலும் பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணமே உள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் வரும் 7-ந் தேதி (நாளை மறுநாள்) ஸ்டாலின் முதல்வராக பதவியேற்க உள்ள நிலையில், தமிழகத்தில் கொரோனா பரவலுக்கு எதிராக தற்போது புதிய கட்டப்பாடுகளை அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, மளிகை மற்றும் காய்கறிகள் கடை நாளை முதல் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரை மட்டுமே செயல்படும், இந்த நேரத்தை தவிர மற்ற நேரங்களில் கடைகள் திறக்க அனுமதி இல்லை.


ஹோட்டல்கள், காலை 6 மணி முதல் 10 மணி வரையும், மதியம் 12 மணி முதல் 3 மணி வரையும், மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை மட்டுமே செயல்படும். இந்த நேரத்தில் பார்சலுக்கு மட்டுமே அனுமதி. ஹோட்டலில் அமர்ந்து சாப்பிட அனுமதி இல்லை.  இதில் டீக்கடைகள் காலை 6 மணி முதல் 12 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி.

அழகு நிலையங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் மீன் மற்றும் இறைச்சி கடைகள் செயல்படுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மற்று கடைகள் அனைத்து காலை 6 மணி முதல் 12 மணிவரை மட்டுமே செயல்பட அனுமதி.

தனியார் மற்றும் அரசு பேருந்துகள்,  ஆட்டோ, கார் ஆகியவற்றில் 50 சதவீத பயணிகளுக்கு மட்டுமே அனுமதி. அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் 50 சதவீத ஊழியர்களுடன் செயல்பட அனுமதி. இதில் குரூப்-ஏ பிரிவில் உள்ள அரசு அதிகாரிகள் மட்டும் அனைத்து நாட்களும் பணிக்கு வர வேண்டும் என்றும் மற்ற அரசு ஊழியர்கள் சுழற்சி முறையில் பணிக்கு வரவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதில் மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்திற்கு வரவேண்டாம் என்று கூறப்பட்டுள்ளது.

நாளை முதல் 20ஆம் தேதி வரை பொதுமக்களுக்கு மின்சார ரயில்களில் அனுமதி இல்லை அத்தியாவசிய பணியாளர்களுக்கு மட்டும் அனுமதி. கல்வி நிறுவன ஊழியர்கள், மாணவர்களுக்கு அனுமதி என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்புகள் அனைத்தும் வரும் 20-ந் தேதி வரை அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

source : https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-covid-19-update-new-restrictions-against-corona-300242/