நடிகை கங்கனா ரனாவத் இயக்குநர் விஜய் இயக்கும் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்திற்கான டீசரும் சமீபத்தில் வெளியாகிப் பெறும் வரவேற்பைப் பெற்றது. குயின் படத்தில் நடித்தற்காகச் சிறந்த நடிகைக்கான தேசிய விருதை அவர் பெற்றிருக்கிறார். இந்நிலையில் அவரது ட்விட்டர் கணக்கு இன்று முடக்கப்பட்டுள்ளது. அவர் மேற்கு வங்கத்தில் தேர்தலுக்குப் பின்பு நடைபெற்ற வன்முறைகளைப் பற்றி தொடர்ச்சியாக ட்வீட் செய்தார். மமதா பானர்ஜியின் வெற்றியை விமர்சிக்கும் வகையில் மேற்கு வங்கத்தில் குடியரசுத்தலைவர் ஆட்சி வர வேண்டும் என்று அவர் தெரிவித்திருந்தார்.
source https://www.news7tamil.live/kangana-ranauts-twitter-account-suspended.html