மேற்கு வங்கத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் பாஜக சார்பில் சல்டோரா தொகுதியில் சந்தனா பவுரி என்ற பெண் வேட்பாளர் போட்டியிட்டார். இவர் மிகவும் வறுமையான பின்புலத்தைக் கொண்டவர். இவரது கணவர் ஒரு தினக்கூலி. அவர் ஈட்டும் சிறு தொகையில்தான், சந்தனா பவுரியும் அவரது மூன்று குழந்தையும் வாழ வேண்டும். இந்நிலையில் அவர் சல்ரோரா தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டார். இவருக்கு எதிராகப் போட்டியிட்ட திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வேட்பாளரான சந்தோஷ் குமார் மொந்தலை 4,145 வாக்குகள் வாக்கு வித்தியாசத்தில் இவர் தோற்கடித்தார்.
இவர் தேர்தல் வேட்புமனு தாக்கல் செய்யும்போது, அவரது சொத்து மதிப்பு குறித்த தகவல்கள் நம்மை அதிர்ச்சியில் ஆழ்த்துகிறது. இவரின் சொத்து மதிப்பு ரூ31,985 மட்டுமே மேலும் இவருக்கு மூன்று ஆடுகள் உள்ளன. இவரது வீட்டில் எந்த அடிப்படை வசதிகளும் இல்லை. மண்வீட்டில்தான் இவரும் இவரது குடும்பமும் வாழ்கின்றனர். 2014ம் ஆண்டு முதல் அரசியலில் இவர் ஈடுபட்டு வருகிறார். 2018 மற்றும் 2019ம் ஆண்டில் கிராம பஞ்சாயத்துத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார். இவரின் வெற்றியை ஏழைமக்களின் வெற்றியாக இவர்கள் தொகுதி மக்கள் பார்க்கின்றனர்.