இந்தியாவில் 4 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில் நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகி வருகின்றன. அது தொடர்பான அப்டேட்கள் உடனுக்குடன் உங்களுக்காக.
கேரள சட்டமன்ற தேர்தல் 2021 (Kerala)
ஏப்ரல் 6ம் தேதி அன்று ஒரே கட்டமாக 14 மாவட்டங்களில் உள்ள 140 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றது. மலப்புரம் தொகுதியின் மக்களவை உறுப்பினராக இருந்த இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் குன்ஹாலி குட்டி தனது பதவியை ராஜினாமா செய்ததால் அந்த தொகுதிக்கான நாடாளுமன்ற இடைத்தேர்தலும் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற்றது.
2016ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடதுசாரி கூட்டணி 91 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. 77.35 சதவீத வாக்குகளைப் பெற்று ஆட்சிக்கு வந்தது இந்த இடதுசாரி கூட்டணி.47 இடங்களில் ஐக்கிய ஜனநாயக முன்னணி வெற்றி பெற்றது. பாஜக நேமம் தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது.
ஐக்கிய ஜனநாயக முன்னணியில் காங்கிரஸ் கட்சி 91 இடங்களிலும், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் 25 இடங்களிலும், கேரள காங்கிரஸ் (ஜோசப்) 10 இடங்களிலும், ரெவலூஸ்னரி சோசியலிஸ்ட் கட்சி 5 இடங்களிலும் போட்டியிடுகிறது. இடதுசாரி முன்னணியில் 2 முறை பதவி வகித்தவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. சி.பி.எம் கட்சியினர் 77 இடங்களிலும், சி.பி.ஐ கட்சி 24 இடங்களிலும், கேரள காங்கிரஸ் (எம்) 12 இடங்களிலும், மதசார்பற்ற ஜனதா தளம் 4 இடங்களிலும் போட்டியிட்டனர்.
மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் 2021 (West Bengal)
294 தொகுதிகளுக்கான சட்டமன்ற தேர்தல் 8 கட்டங்களாக மேற்கு வங்கத்தில் நடைபெற்றது. ஆளும் திரிணாமுல் காங்கிரஸ், இடதுசாரி, மற்றும் பாஜக என்று மும்முனை போட்டிகள் அங்கே நிலவி வருகிறது. சுவேந்து அதிகாரி உள்ளிட்ட முக்கியமான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவர்கள் பாஜகவிற்கு கட்சி மாறிய பின் நடைபெற்ற தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகி வருகின்றன. நில கையப்படுத்துதலுக்கு எதிராக போராட்டம் நடைபெற்ற நந்திகிராம் தொகுதியில் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜீ போட்டியிட்டார். பாஜக சார்பில் சுவேந்து அதிகாரி அங்கு மமதாவை எதிர்த்து போட்டியிட்டார்.
2016ம் ஆண்டு தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 293 தொகுதிகளில் போட்டியிட்டு 211 தொகுதிகளில் வெற்றி பெற்றன. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் வாக்கு வங்கி 44.91% ஆக இருந்தது. காங்கிரஸ் இடது சாரி கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலில் களம் இறங்கின. இருப்பினும் சி.பி.ஐ.(எம்) கட்சியின் வாக்கு வங்கி 19.75%ல் இருந்து 10.35% ஆக சரிந்தது. பாஜக 291 தொகுதிகளில் போட்டியிட்டு 3 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. அவர்களின் வாக்கு வங்கி 10.16% என்று உயர்ந்தது. மார்ச் 27, ஏப்ரல் 1, ஏப்ரல் 6, ஏப்ரல் 10, ஏப்ரல் 17, ஏப்ரல் 22, ஏப்ரல் 26 மற்றும் ஏப்ரல் 29 என 8 எட்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. அதன் முடிவுகள் உங்களுக்காக இதோ.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Puducherry Assembly Election Results 2021
ஏப்ரல் 6ம் தேதி அன்று ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. யூனியன் பிரதேசமான புதுவையில் மொத்தம் 30 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. புதுவை மாவட்டத்தில் 23 தொகுதிகளும், காரைக்கால் மாவட்டத்தில் 5 தொகுதிகளும், கேரள பரப்பில் அமைந்திருக்கும் மாஹே மற்றும் ஆந்திர பரப்பில் அமைந்திருக்கும் யானம் ஆகிய இடங்களில் தலா ஒரு தொகுதியையும் கொண்டுள்ளது.
சட்டமன்ற தேர்தலுக்கு சில வாரங்களுக்கு முன்பு, ஆளும் காங்கிரஸ் கட்சியில் இருந்து சில முக்கிய அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் தங்களின் பதவியை ராஜினாமா செய்துவிட்டு பாஜகவில் இணைந்தனர். இதனால் அங்கே காங்கிரஸ் ஆட்சி கவிழ்க்கப்பட்டது. காங்கிரஸ் + திமுக கூட்டணியில் காங்கிரஸ் 15 தொகுதிகளிலும், திமுக 14 தொகுதிகளிலும், விசிக ஒரு தொகுதியிலும் போட்டியிட்டது.
என்.ஆர்.காங்கிரஸ் தலைமையில் உள்ள கூட்டணியில் பா.ஜ.க மற்றும் அ.தி.மு.க இடம் பெற்றுள்ளன. என். ஆர். காங்கிரஸ் 16 தொகுதிகளிலும், பாஜக 9 தொகுதிகளிலும், அதிமுக 5 தொகுதிகளிலும் போட்டியிட்டது. என். ஆர். காங்கிரஸின் தலைவர் ரங்கசாமியை முதல்வர் வேட்பாளராக அறிவித்துள்ளனர்.
source https://tamil.indianexpress.com/election/tn-kerala-assam-puducherry-wb-assembly-election-results-2021-live/