தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2-வது அலை தீவிரமடைந்து வந்த நிலையில், கடந்த ஒரு வாரமான பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதற்கு முக்கிய காரணமாக தமிழக அரசின் தீவிர கொரோனா தடுப்பு நடவடிக்கையும், ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தியது தான். இம்மாத தொடக்கத்தில் ஒரு வார காலம் தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. அப்போது பாதிப்பு எண்ணிக்கை கனிமாக குறைந்த்து.
தொடர்ந்து கடந்த 4-ந் தேதி மேலும் ஒரு வாரம் ஊரடங்கு நீடிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதில் பல தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில். அதிக பாதிப்பு உள்ள 11 மாவட்டங்களுக்கு முழு ஊரடங்கு நீடிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், 2-ம் கட்ட ஊரடங்கு வரும் 14-ந் தேதியுடம் முடிவுக்கு வர உள்ள நிலையில், தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு நீடிக்கப்படுமா என்பது குறித்து பொதுமக்களிடம் பெரும் எதிர்பார்ப்பு எழுந்தது.
இந்நிலையில், தமிகழத்தில் ஊரடங்கு குறித்து முதல்வர் ஸ்டாலின், மருத்துவ வல்லூநர்களுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். இதில் மீண்டும் ஊரடங்கை நீடிக்க வேண்டும் என்று முதல்வருக்கு மருத்துவக்குழு பரிந்துரை செய்ததாக தகவல் வெளியானது. அதனை உறுதிப்படுத்தும் விதமாக தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு மேலும் ஒரு வார காலம் நீடிக்கப்படுவதாக முதல்வர் அறிவித்துள்ளார். அதன்படி இந்த உத்தரவு வரும் 21-ந் தேதி வரை அமலில் இருக்கும். இதில் மேலும் நில தளர்வுகள அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி இந்த ஊரடங்கு உத்தரவில் அனுமதிக்கப்பட்டுள்ள சில தளர்வுகள் :
வாடகை வாகனங்கள், டேக்ஸி, மற்றும் ஆட்டோக்கள் இ-பதிவுடன் அனுமதிக்கப்படும் என்றும், ஓட்டுநருடன் 3 பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்றும், ஆட்டோக்களிவ் 2 பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பம்ப் செட் பழுது நீக்கும் கடைகள், கண்ணாடி கடைகள் அனைத்தும் காலை 9 மணிமுதல் 2 மணி வரை திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
சலுர்ன் கடைகள் 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் காலை 6 மணி முதல் மாலை 5 மணிவரை செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது.
டாஸ்மாக் கடைகள் காலை 10 முதல் மாலை 5 மணி வரை செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளாட்சி கட்டுப்பாட்டில் உள்ள பூங்காக்கள் காலை 6 மணி முதல் 9 மணி வரை நடைப்பயிற்சிக்காக அனுமதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கட்டுமான பொருட்கள் விற்பனை கடைகள், செல்போன் ஷாப்ஸ், மற்றும் இதர கடைகள் அனைத்தும் காலை 9 மணி முதல் 2 மணி வரை செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பள்ளி கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை மற்றும் நிர்வாக பணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மற்றபடி கடந்த முறை அனுமதிக்க்ப்பட்ட அனைத்து பணிகளுக்கும் அனுமதி வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
பொதுமக்கள் கொரோனா தொற்று ஊரடங்கை கடைபிடித்து அசியமின்றி வெளியில் வருவதை தவிர்க்கவும், கொரோனா தொற்று தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளின்படி முக்கவசம் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்றும், தேவையின்றி கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
source https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-government-releases-new-regulations-for-extended-lockdown/