சனி, 12 ஜூன், 2021

ஜி-7 மாநாடு: இந்த ஆண்டுக்கான நிகழ்ச்சி நிரல்

 இங்கிலாந்து பிரதமர் போரீஸ் ஜான்சன், இந்திய பிரதமர் மோடி ஜி7 மாநாட்டில் ஜூன் 12 மற்றும் 13 தேதிகளில் காணொளி காட்சி வழியாக பங்கேற்க உள்ளனர்.

இந்த ஆண்டுக்கான ஜி-7 நிகழ்ச்சி நிரல்கள் என்ன?

அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, இத்தாலி, கனடா, ஃப்ரான்ஸ் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின் கூட்டமைப்பு ஆகும். தற்போது இங்கிலாந்து இதன் தலைமை நாடாக செயல்பட்டு வருகிறது. தற்போது நடைபெற உள்ள இந்த கூட்டத்தில் பங்கேற்க ஆஸ்திரேலியா, கொரியா மற்றும் தென்னாப்பிரிக்கா நாடுகளுடன் இந்தியாவையும் அழைத்துள்ளது இங்கிலாந்து. இக்கூட்டங்கள் ஹைப்ரிட் மோடில் நடைபெற உள்ளது.

Build Back Better என்ற தலைப்பின் கீழ் நடைபெற உள்ள இந்த கூட்டத்தில் இங்கிலாந்து அதன் பதவிக்கான நான்கு முன்னுரிமை பகுதிகளை கோடிட்டுக் காட்டியுள்ளது. அவை அனைத்தும் கொரோனா தொற்றில் இருந்து முழுமையாக மீண்டு வருதல் மற்றும் எதிர்காலத்தில் தொற்றுநோய்களுக்கு எதிரான பின்னடைவில் இருந்து முன்னேறுதல் போன்றவற்றிற்கு வழி வகுக்கின்றன. சுதந்திரமான மற்றும் நியாயமான வர்த்தகத்தை வென்றெடுப்பதன் மூலம் எதிர்கால செழிப்பை ஊக்குவித்தல், காலநிலை மாற்றத்தை சமாளித்தல் மற்றும் கிரகத்தின் பல்லுயிரியலைப் பாதுகாத்தல் ஆகியவை குறித்தும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.

உடல்நலம் மற்றும் காலநிலை மாற்றத்தை மையமாகக் கொண்டு, தொற்றுநோய்களுக்கு மத்தியில் உலகத்தை முன்னோக்கி நகர்த்துவதற்கான கருத்துகளை தலைவர்கள் பரிமாறிக் கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா முதன்முறையாக இதில் பங்கேற்கிறதா?

2014ம் ஆண்டு முதல் ஜி7 மாநாட்டில் இந்தியப் பிரதமர் பங்கேற்பது இது இரண்டாவது முறையாகும். இந்தியா 2019ம் ஆண்டு, ஃபிரான்ஸ் தலைமை வகித்த பியாரிட்ஸ் மாநாட்டில் நல்லெண்ண கூட்டாளியாக பங்கேற்றது. பிரதமர் மோடி காலநிலை, பல்லுயிர் பெருக்கம் மற்றும் பெருங்கடல்கள் குறித்து நடைபெற்ற அமர்வுகளிலும், டிஜிட்டல் மாற்றம் குறித்து நடைபெற்ற அமர்வுகளிலும் பங்கேற்றார்.

பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான ஆட்சியில் இந்தியா 5 முறை ஜி8 மாநாடுகளில் பங்கேற்றது. Crimea இணைக்கப்பட்ட பிறகு ரஷ்யா மார்ச் 2014ம் ஆண்டில் காலவரையின்றி ஜி8 உறுப்பு நாடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டது.

G-7 agenda this year : புதியது என்ன?

இந்த ஆண்டு இங்கிலாந்து இந்தியாவை அழைத்திருந்தாலும், அதிபர் டொனால்ட் டிரம்பின் கீழ் அமெரிக்காவும் கடந்த ஆண்டு இந்தியாவுக்கு அழைப்பு விடுத்திருந்தது. கடந்த ஆண்டு மே மாதம் ஜி-7 குழுவை மிகவும் காலாவதியான குழு” என்று அழைத்த டிரம்ப், இந்தியா, ஆஸ்திரேலியா, தென் கொரியா மற்றும் ரஷ்யாவை மிகப்பெரிய முன்னேறிய பொருளாதாரங்களின் குழுவில் சேர்க்க விரும்புகிறேன் என்று கூறியிருந்தார்.

ஜி7விற்கு பதிலாக ஜி10 அல்லது ஜி11 என்று பெயர் மாற்றம் செய்து 2020 செப்டம்பர் அல்லது நவம்பர் மாதங்களில் குழு கூட்டத்தை நடத்த முன்மொழிந்தார் முன்னாள் அமெரிக்க அதிபர். இருப்பினும் கொரோனா வைரஸ் மற்றும் அமெரிக்க தேர்தல் காரணமாக அந்த கூட்டங்கள் நடைபெறவில்லை. இந்த ஆண்டு மாநாட்டில் கலந்து கொள்ள அவர் இங்கிலாந்து செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நாட்டில் நிலவும் கொரோனா சூழல் காரணமாக அவரின் பயணம் ரத்து செய்யப்பட்டது.

இந்த உச்சி மாநாட்டில் கவனிக்கப்பட வேண்டியவை என்னென்ன?

ஜோ பைடனின் ஐரோப்பிற்கான தன்னுடைய முதல் பயணத்தில் அமெரிக்கா மீண்டும் வந்துவிட்டது என்பதை நினைவில் நிறுத்த முற்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இங்கிலாந்திற்கு வரும் அவர் பிரதமர் போரீஸ் ஜான்சன், எலிசபெத் மகாராணி மற்றும் ஜி7 உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளை சந்திப்பார். இரண்டு நாட்களுக்குப் பிறகு ஜெனீவாவில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுடன் உரையாடுவதற்கு முன்பு, ஜூன் 14 அன்று அவர் பிரஸ்ஸல்ஸில் நேட்டோ மாநாட்டிற்கு செல்கிறார்.

ரஷ்ய அதிபரை சந்திப்பதற்கு முன்னர் நட்பு நாடுகளுடன் வாஷிங்டனின் ஆலோசனையின் நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க இந்த நிகழ்வுகளின் வரிசைமுறை செய்யப்பட்டுள்ளது.

இது அமெரிக்க ஜனாதிபதியின் பன்முகத்தன்மைக்கான ஆரம்ப முயற்சியுடன் நன்றாகப் பிணைந்துள்ளது – ஆஸ்திரேலியா, இந்தியா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா ஆகிய “குவாட்” தலைவர்களின் முதல் உச்சிமாநாட்டை அவர் நடத்தினார். இது தடுப்பூசி உற்பத்தியை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டது மற்றும் பெய்ஜிங்கை நோக்கி அவர்களின் நிலைகளை சீரமைத்தது. ஜி 7 உச்சிமாநாட்டிற்கு முன்னதாக கோவிட் -19 க்கு எதிராக உலகிற்கு தடுப்பூசி போடுவதற்கான ஒரு புதிய முயற்சியை பைடன் அறிவிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

500 மில்லியன் டோஸ் ஃபைசர் / பயோஎன்டெக் தடுப்பூசியை சர்வதேச விநியோகத்திற்காக வாங்க உள்ளது பைடன் நிர்வாகம் என்று அமெரிக்க ஊடகங்கள் அறிவித்துள்ளன. இரண்டாம் உலகப் போரின் போது நாங்கள் ஜனநாயகத்தின் ஆயுதக் களஞ்சியமாக இருந்தோம். தற்போது தடுப்பூசிகளின் களஞ்சியமாக இருக்கப் போகின்றோம் என்று அந்நாட்டின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சலீவன் கூறியுள்ளார். இந்த தொற்றுநோயை முடிந்தவரை விரைவாக முடிவுக்கு கொண்டுவருவதற்கான ஒரு விரிவான திட்டம் குறித்து ஜி7 அறிவிக்கும் என்றும் அவர் மேற்கோள்காட்டினார்.

பைடன் – புடின் ஆலோசனைக் கூட்டம் ஏன் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது?

அமெரிக்கா – ரஷ்யா இடையே நட்புறவில் சவாலான காலம் இது. பனிப்போருக்கு பிறகான காலத்தில் இருந்தே இவ்விரு நாடுகளும் இப்படி தான் இருக்கின்ற என்று சில ஆய்வாளர்கள் கூறுகின்றனர். 1985ம் ஆண்டு அமெரிக்க அதிபர் ரோனால்ட் ரீகன் சோவியத் யூனியன் அதிபர் மிக்கைல் கோர்பசெவ்வை சந்தித்த ஜெனிவாவில் தான் தற்போது புடின் மற்றும் பைடனின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.

2020ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின் போது பைடனின் வெற்றி வாய்ப்புகள் பாதிக்கப்பட வேண்டும் என்று மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளுக்கு புடின் ஒப்புதல் வழங்கினார் என்று வாஷிங்டன் உளவுத்துறை நம்புகிறது. எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னியை ஹேக் செய்து சிறையில் அடைத்ததற்காக பைடன் நிர்வாகம் ரஷ்யாவிற்கு எதிராக பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது.

இருதரப்பு உறவுகளில் உள்ள சேதங்களைக் கட்டுப்படுத்த மாஸ்கோவுடன் தொடர்பு கொள்வதற்கான முக்கிய நடவடிக்கையை வாஷிங்டனை உருவாக்குவதன் மூலம் அமெரிக்கா தனது மூலோபாய போட்டியாளரான சீனாவில் கவனம் செலுத்த விரும்புகிறது.

இந்தியா இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அடையும் லாபம் என்ன?

நவீனகால புவிசார் அரசியல் யதார்த்தங்களை பிரதிபலிக்கும் வகையில் உலகளாவிய நிறுவனங்கள் மற்றும் குழுக்களை சீர்திருத்த இந்தியா நீண்ட காலமாக அழைப்பு விடுத்துள்ளது. ஜி7 நாடுகளுடன் இந்தியாவை இணைப்பதற்கான ட்ரெம்பின் ஆதரவு உலகளாவிய உயர் அட்டவணையின் ஒரு பகுதியாக இருக்கும்.

தானாக சீனா வளர்ந்து வரும் நிலையில், பெய்ஜிங்கை கையாள்வதற்கான ஒருமித்த கருத்துகள் கொண்ட நாடுகளை அமெரிக்கா அழைக்கிறது. பைடன் மற்றும் ஜான்சன் இருவரும் உலகளாவிய ஜனநாயக நாடுகளின் கூட்டணி 10 -11 நாடுகளை உருவாக்க முக்கிய முடிவு மேற்கொண்டால் இது மிக முக்கியமான செயல்பாடாக அமையும்.

இந்தியா தடுப்பூசிகளின் பற்றாக்குறையை எதிர்கொண்டு வருவதால், அமெரிக்க அதிபர் அறிவித்த ஒதுக்கீட்டை டெல்லி மிகவும் கவனமாக கவனிக்கும்.

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கர் அமெரிக்கா சென்று திரும்பிய சில நாட்களில் உலகளாவிய தடுப்பூசி பகிர்வுக்கான மூலோபாயத்தின் ஒரு பகுதியாக இந்தியாவுக்கு தடுப்பூசிகளை விநியோகிப்பதாக கூறியிருந்தது.

அமெரிக்க அதிபர் பைடன் இந்த அறிவிப்பை வெளியிட்ட நிலையில், துணை அதிபர் கமலா ஹாரீஸ் இந்திய பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்திருந்தார். அப்போது வாஷிங்கடனின் நிலைப்பாடு என்ன என்பதை பிரதமரிடம் கூறினார்.

ஜூன் மாத இறுதிக்குள் உலகளவில் குறைந்தது 80 மில்லியன் தடுப்பூசிகளைப் பகிர்ந்து கொள்வதற்கான கட்டமைப்பின் ஒரு பகுதியாக பைடன் -ஹாரிஸ் நிர்வாகம் முதல் 25 மில்லியன் டோஸ் கோவிட் தடுப்பூசிகளை பகிர்ந்து கொள்ளத் தொடங்கும் என்று அறிக்கை ஒன்றில் அமெரிக்கா தெரிவித்துள்ளது.

நேரடியாகவும் கோவாக்ஸ் மூலமாகவும் இந்தியா அமெரிக்காவிலிருந்து தடுப்பூசிகளைப் பெற வாய்ப்புள்ளது. ஆரம்ப மதிப்பீடுகளில் இந்தியா முதல் தவணையில் சுமார் 2 முதல் 3 மில்லியன் தடுப்பூசிகளைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

source https://tamil.indianexpress.com/explained/the-g-7-agenda-this-year-and-what-is-in-it-for-india-312807/