வியாழன், 12 ஆகஸ்ட், 2021

கடந்த 24 மணி நேரத்தில் 41,195 பேருக்கு கொரோனா பாதிப்பு

 12 08 2021

கடந்த 24 மணி நேரத்தில் 41,195 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நாடு முழுவதும் கொரோனா 2ஆம் அலையின் பாதிப்பு தொடர்ச்சியாக குறைந்துகொண்டே வருகிறது. 3ஆம் அலையை எதிர்கொள்ள மத்திய – மாநில அரசுகள் உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி தயாராகி வருகின்றன. அதேபோல கொரோனா தடுப்பூசி போடும் பணியும் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பில், நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 41,195 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளது. இதுவரை மொத்தம் 3,20,77,706, பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 39,069 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். மொத்தமாக இதுவரை 3,12,60,050 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் தற்போது 3,87,987 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். அதே நேரத்தில் கொரோனா பரவல் வீதம் 2.23 ஆகவும், தினசரி பரவல் வீதம் 1.94 ஆகவும் உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 490 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். இதுவரை மொத்தம் 4,29,669 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இதுவரை மொத்தம் 52,36,71,019 கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இதில் நேற்றைய தினம் 44,19,627 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

source https://news7tamil.live/india-today-corona-virus-update-2.html