வியாழன், 29 மார்ச், 2018

ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு மத்திய அரசு நோட்டீஸ்! March 29, 2018

ஃபேஸ்புக் பயனாளிகளின் விவரங்களை பகிர்ந்தது தொடர்பாக வரும் ஏப்ரல் 7-ம் தேதிக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று அந்நிறுவனத்துக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. 

ஃபேஸ்புக் நிறுவனம், கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா நிறுவனத்துக்கு, இந்தியா பயனாளர்களின் விவரங்களை பகிர்ந்ததாக புகார் எழுந்தது. இதன் மூலம் இந்திய தேர்தலில் முடிவுகளை மாற்றுவதற்கு அந்த தகவல்கள் பயன்படுத்தப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. 

உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய இவ்விவகாரத்தில் பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கம்பர்க் வருத்தம் தெரிவித்திருந்த நிலையில், இதுதொடர்பாக பல்வேறு நாடுகள் விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளன. 

இதனிடையே இவ்விவகாரத்தில் ஃபேஸ்புக் நிறுவனத்திடம் விளக்கம் கேட்டு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.