தமிழகத்தில் பிப்ரவரி 1-ம் தேதி முதல் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்படும் நிலையில் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பொது சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் பள்ளிகள், கல்லூரிகள் நாளை மீண்டும் திறக்கப்படுவதால், பொது சுகாதாரத்துறை கொரோனா தொற்று நோய் தொடுப்புக்காக நிலையான வழிக்காட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
பள்ளிகள், கல்லூரிகளுக்கு அறிவிக்கப்பட்ட வழிகாட்டும் நெறிமுறைகள்:
* பள்ளிகள், கல்லூரிகளில் அனைத்து மாணவர்களும் வருகை தரலாம். மாணவர்கள், ஆசிரியர்கள் அனைவரும் எல்லா நேரமும் முகக் கவசம அணிந்திருக்க வேண்டும்.
* சீரான இடைவெளியில் ஹேண்ட் சானிடைசரைப் பயன்படுத்தி கைகளை சுத்தம் செய்ய வேண்டும். அல்லது கைகளைக் கழுவ வேண்டும்.
*பள்ளிகள், கல்லூரிகளில் குரூப் லஞ்ச் சாப்பிட அனுமதிக்க கூடாது.
* தினமும் இரண்டு முறை கிருமி நாசினி தெளிக்க வேண்டும்.
*பள்ளிகள், கல்லூரிகளில் அனைத்து மாணவர்களும் ஆசிரியர்களும் பணியாளர்களும் உடல் வெப்பநிலையை ஸ்கிரீனிங் செய்ய வேண்டும்.
*யாருக்காவது காய்ச்சல் அறிகுறி இருந்தால், அவர்கள் ஆர்டி-பிசிஆர் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். பரிசோதனை முடிவு வரும் வரை அவர்கள் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும்.
*அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு யாராவது அறிகுறிகள் அதிகரித்தால், அவர்களும் ஆர்டி – பிசிஆர் பரிசோதனை செய்ய வேண்டும். உள்ளிட்ட வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் அறிவிக்கப்பட்டுள்ளது.
*அனைத்து பணியாளர்களும் 2 டோஸ் தடுப்பூ செலுத்திக்கொண்டிருக்க வேண்டும்.
*பள்ளிகளில் 15-18 வயதுடைய மாணவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்.
*மாணவர்கள் வகுப்பறையின் உள்ளேயும் நூலகத்திலும் வாஷ் ரூம் வெளியே, கை கழுவும் இடங்களில் குடிநீர் பகுதி இடங்களில், பள்ளி சமையலறை, ஹால், வகுப்பறைகளில், பேருந்துகள், வாகன நிறுத்தும் இடங்களில், பள்ளிக்கு உள்ளே நுழையும் இடங்களில் வெளியே செல்லும் இடங்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று நினைவூட்டும் விதமாக போஸ்டர்கள், ஸ்டிகர்கள், உரிய இடங்களில் வைக்க வேண்டும்.
*பள்ளி கல்லூரி வளாகத்திற்குள் கண்ட இடங்களில் எச்சில் துப்புவதை கண்டிப்பாக தடை செய்ய வேண்டும். உள்ளிட்ட வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
31 1 2022
source https://tamil.indianexpress.com/tamilnadu/schools-colleges-reopening-covid-19-new-sop-guidelines-404677/